Tuesday, August 22, 2017

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

பதிவு செய்த நாள்
ஆக 22,2017 02:25



சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக இருந்த தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு மற்றும் வட மேற்கு மாநிலங்களுக்கு நகர்ந்து உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் மழை குறைந்துள்ளது.

இந்நிலையில், 'வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், நாளை(ஆக.,23) முதல், மூன்று நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கோவை, சின்னக்கல்லாரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, நீலகிரி, 4; தர்மபுரி, மதுக்கூர், பேச்சிப்பாறை, செங்குன்றம், 3; ஏற்காடு, ஒகேனக்கல், தென்காசி, செங்கோட்டை, தம்மம்பட்டி, தொழுதுார், ராசிபுரம், சேத்தியாத்தோப்பு, தாமரைப்பாக்கம், கடலுாரில், 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...