தெரிகிறது மாற்றம்: ஓட்டல்கள், சுவீட் ஸ்டால்களில் துணிப்பைகள்:பிளாஸ்டிக் பைகளுக்கு தடையால் விழிப்புணர்வு
பதிவு செய்த நாள்26ஆக
2017
23:18
ஸ்ரீவில்லிபுத்துார்; நகராட்சி அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் ஓட்டல்கள் மற்றும் சுவீட் ஸ்டால்களில் பிளாஸ்டிக் கேரிபைகளுக்கு பதிலாக, துணிப்பை கொடுப்பதால், பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டில் மக்களிடம் மாற்றத்தை உருவாக்கி வருகிறது. மேலும், கூடுதல் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் முழுஅளவில் வெற்றி பெறலாம் என்ற நிலை எட்டபடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாகரீகம், போதிய கல்வியறிவு இல்லாத காலத்தில் இயற்கையை சார்ந்து மக்கள் வாழ்ந்தனர். அதனால் நோய் நொடியில்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக தங்கள் அன்றாட வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டனர். சரியான உழைப்பு, சரியான ஓய்வு, சரியான துாக்கம் என தங்களது 24 மணிநேர வாழ்க்கையை இயல்பாகவே மேற்கொண்டனர். அதனால் காய்ச்சலும், அம்மையும் முன்பு பெரிய நோயாக கருதப்பட்டது. இதில் காய்ச்சலுக்கு மருத்துவர்களை நாடினாலும், அம்மை நோய்க்கு வீ்ட்டிலிருந்து இறைவனை வேண்டி, வேப்ப இலையும், மஞ்சள் தண்ணீரும், பழங்களும் மருந்தாக விளங்கியது. ஆனால், நாகரீகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் அதிகரித்த இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர். இதனால் அன்றைய காய்ச்சல் இன்றைய டெங்குவாக உருவெடுத்துள்ளது. இயற்கைக்கு முரணான உணவுப்பழக்கங்கள் இன்றைய மனித சமுதாயத்தை பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கிவிட்டது. இத்தகைய நோய்களை உருவாக்குவதில் பாலிதீன் கவர்களும், பிளாஸ்டிக் பொருட்களுமே முக்கிய பங்கு வகிக்கிறது.
தமக்குத்தாமே நோய்
இவற்றின் பயன்பாடுகளை அறவே ஒழிப்பதன் மூலமே மனித சமுதாயத்தை நோய்களிலிருந்து காப்பாற்றமுடியும் என்பதை உணர்ந்த அரசு நிர்வாகம், தற்போது அது குறித்தான விழிப்புணர்வினை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கண்துடைப்பு பணியாக இருந்த இந்த பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு, இன்று அதிதீவிரமடைந்துள்ளது. முன்பு ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் வாங்க சில்வர் பாத்திரங்களையும், துணிப்பைகளையும் பயன்படுத்திய மக்கள், இன்று கேரிபேக்குகளிலேயே உணவுப்பொருட்களை வாங்கி, தமக்குத்தாமே நோய்களை உருவாக்கி கொண்டனர். இதனால் உடல் ஆரோக்கியத்தை இழந்தனர். இப்படிநாளுக்குநாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை உணர்ந்த அரசு நிர்வாகம், தற்போது பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பணியினை தீவிரமாக்கியுள்ளது.
வாழை இலை ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வாழை இலையின் விலை மற்றும் பற்றாக்குறையினால் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை ஓட்டல் உரிமையாளர்கள் தாங்களாகவே குறைத்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் பாலிதீன் ஒழிப்பு முழுஅளவில் வெற்றி பெறும். இதற்கு பொதுமக்களும், வியாபார நிறுவனங்களும் தாங்களாகவே முன்வரவேண்டும் என்பதும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கை , விழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
தேவை தொடர் நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்துார் ரவீந்திரநாத்,''இயற்கையை பாழ்படுத்தும் கேரிபைகள் முற்றிலும் ஒழிப்பது மிகவும் அவசியம், இதற்கு அரசின் தொடர் நடவடிக்கை தேவை. தற்போது ஓட்டல்களில் கேரிப்பைகளுக்கு பதில் துணிப்பை தரத் துவங்கி உள்ளனர். இது இயற்கை காப்பதில் மக்களின் பங்களிப்பை காட்டுகிறது. ஆனாலும், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு தருவதும். கேரிபையில் சாம்பார், சால்னா பார்சல் கட்டுவதையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மக்களும் தங்கள் வீடுகளிலிருந்து வரும்போதே சில்வர் பாத்திரங்களை கொண்டு வந்து, உணவுப்பொருட்களை வாங்கவேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை அரசு நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்,''என்றார்.

பேப்பர் கப்ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அதிகாரிகள் ஓட்டல்கள், சுவீட் ஸ்டால்கள், வணிகநிறுவனங்கள், பெட்டிகடைகள் என அனைத்து பகுதிகளிலும் நகராட்சி அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தி கேரிபைைகளை பறிமுதல் செய்தனர். மொத்த விற்பனையாளர்களின் வீடுகளிலும் சோதனை செய்து, பறிமுதல் செய்தனர். இதனால் கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்துள்ளனர். இதுவரை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்கிய டீ மற்றும் காபி களை, தற்போது பேப்பர் கப்புகளில் வழங்குகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஓட்டல்களில் கேரி பைகளுக்கு பதில் துணிப்பை வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை கட்டணம் கேட்டாலும் பெரும்பாலானோர் தருகின்றனர். இதன் மூலம் கேரிபைகள் ஒழிப்பதில் மக்களிடமும் ஒருவித மாற்றம் ஏற்பட்டு இருப்பது வரவேற்கதக்கது.
வாழை இலை ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வாழை இலையின் விலை மற்றும் பற்றாக்குறையினால் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை ஓட்டல் உரிமையாளர்கள் தாங்களாகவே குறைத்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் பாலிதீன் ஒழிப்பு முழுஅளவில் வெற்றி பெறும். இதற்கு பொதுமக்களும், வியாபார நிறுவனங்களும் தாங்களாகவே முன்வரவேண்டும் என்பதும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கை , விழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
தேவை தொடர் நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்துார் ரவீந்திரநாத்,''இயற்கையை பாழ்படுத்தும் கேரிபைகள் முற்றிலும் ஒழிப்பது மிகவும் அவசியம், இதற்கு அரசின் தொடர் நடவடிக்கை தேவை. தற்போது ஓட்டல்களில் கேரிப்பைகளுக்கு பதில் துணிப்பை தரத் துவங்கி உள்ளனர். இது இயற்கை காப்பதில் மக்களின் பங்களிப்பை காட்டுகிறது. ஆனாலும், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு தருவதும். கேரிபையில் சாம்பார், சால்னா பார்சல் கட்டுவதையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மக்களும் தங்கள் வீடுகளிலிருந்து வரும்போதே சில்வர் பாத்திரங்களை கொண்டு வந்து, உணவுப்பொருட்களை வாங்கவேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை அரசு நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்,''என்றார்.
No comments:
Post a Comment