Sunday, August 27, 2017

அஞ்சலகங்களில் விரைவில் ஆதார் மையம்

பதிவு செய்த நாள்26ஆக
2017
21:34

ஆதார் விபரங்கள் தொகுக்கும் பணியும், திருத்தங்கள் செய்யும் பணியும் மீண்டும், அஞ்சல் துறை வசமாகிறது. தமிழக அஞ்சலங்களில், இதற்கான பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நாட்டில் குறைந்தது, 182 நாட்கள் வசித்த ஒருவர், ஆதார் அட்டை பெறலாம். இது, ஆரம்பத்தில் அஞ்சலகங்களில் வழங்கப்பட்டது; பின், தனியார் வசம் சென்றது.இதுவரை, 100 கோடி பேர் ஆதார் எண் பெற்று உள்ளனர். தினமும், மூன்று லட்சம் பேர் வரை, ஆதார் விபரங்களை
திருத்தம் செய்து வருகின்றனர்.

ஆதார் தொகுப்பு தனியார் வசம் உள்ளதால், தனிநபரின் ரகசியங்கள் திருட்டு போவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.அரசின் சேவைகளுக்கு, ஆதாரை கட்டாய மாக்கக்கூடாது என, நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஆதார் திட்டம் முழுவதையும், மீண்டும்
அஞ்சலகங்கள் வசமாக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது குறித்து, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர், ஆர்.ஆனந்த் கூறியதாவது:
அஞ்சலகங்களில், மீண்டும் ஆதார் மையம் அமைக்கும், ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. ஆதார் பதிவு, ஆதார் மாற்றங்கள் என, இரு பிரிவுகளாக செயல்படும். சென்னை மண்டலத்தில், 568 தலைமை, துணை அஞ்சலகங்கள் உள்ளன.

இதில், சென்னை நகரில் உள்ள, 10 அஞ்சலகங்களில், ஆதார் கார்டு திருத்தம் செய்யும் பணி, ஜூலை முதல் நடந்து வருகிறது. இதுவரை, 5,600 கார்டுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
விரைவில், அனைத்து அஞ்சலகங்களிலும், ஆதார் மையம் திறக்கப்படும். சென்னையில், திறக்கப்பட்டுள்ள நிரந்தர அஞ்சல் தலை கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் சேகரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பசுமை திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...