Sunday, August 27, 2017

சென்னை:இறந்தவர்கள் பெயரில், மருத்துவ படிப்பு சான்றிதழ் பெற்ற, ஐந்து போலி ஹோமியோபதி டாக்டர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

40 பேர்

தமிழகத்தில், முறையாக மருத்துவம் படிக்காத பலர், ஹோமியோபதி டாக்டர்களாக பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் மற்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், தமிழக ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர், 2016ல், புகார் அளித்தார்.

இதில், நடவடிக்கை எடுக்காததால், சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த, ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர், டாக்டர் ஞானசம்பந்தம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து, பதிலளிக்கும்படி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், போலி சான்றிதழ் வழங்கியதாக, தமிழக ஹோமியோபதி முன்னாள் பதிவாளர் மற்றும் உறுப்பினர்கள் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரின் விசாரணை

யில், 2010 - 2012 வரை, ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் சார்பில், 40 பேருக்கு போலி சான்றிதழ்வழங்கியது கண்டறியப்பட்டது. தனிப்படைமேலும், இறந்து போன ஹோமியோபதி டாக்டர்களின் பதிவு எண்கள் அடிப்படையில், போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, போலி ஆவணங்கள் பெற்ற, 10 பேர், தானாக முன்வந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் சான்றிதழ்களை ஒப்படைத்தனர். இந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், கோவை - ரவிக்குமார், கடலுார் - வேல்முருகன், திருப்பூர் -ஸ்ரீதரன், தேனி - அனில்குமார், மதுரை - குமார் ஆகிய ஐந்து பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புஉடைய, மற்ற போலி டாக்டர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து, தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...