சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்: 27 டன் பழைய டயர்கள் அகற்றம்

சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே 27 டன் பழைய டயர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சினிமா தியேட்டர் – 3 குடோன்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 25, 2017, 04:15 AM
சேலம்,
சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 60 வார்டுகளிலும் ‘டெங்கு‘ காய்ச்சலை உருவாக்கும் ‘ஏடிஸ்‘ கொசுக்களை ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு, பள்ளி, நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பழைய டயர், தொட்டி, டப்பாக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளில் தேங்கும் தண்ணீரை அகற்றி சுத்தப்படுத்த அறிவுரை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்தை பேணிகாக்காத வகையில் செயல்பட்ட பள்ளி, ஓட்டல், சினிமா தியேட்டர் உள்ளிட்ட 120 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள், கார்கள், லாரிகள், டிராக்டர்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் கடைகள் முன்பு பழைய டயர்கள் குவித்து வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதாக சேலம் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று காலை சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாதுபாய்குட்டை, சி.சி.ரோடு, ஏ.ஏ.ரோடு, இ.இ.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டயர் கடைகள், குடோன்கள் மற்றும் சந்து பகுதிகளில் டெங்கு சிறப்புப்பணி டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், சந்திரன், ஆனந்தகுமார் ஆகியோர் துப்புரவு பணியாளர்களுடன் ஆய்வு நடத்தினர்.
அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் டயர்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து கடைகள், குடோன்களில் உள்ள பழைய டயர்கள் 27 டன் அளவுக்கு 4 லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் 3 டயர் குடோன்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள 4 சினிமா தியேட்டர்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒரு தியேட்டரில் பழைய டப்பாக்கள் மற்றும் தொட்டியில் தேங்கி நின்ற தண்ணீரில் கொசு புழுக்கள் உருவாகி இருப்பதை அதிகாரிகள் கண்டனர். அதைத்தொடர்ந்து அவற்றை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். மேலும் அந்த தியேட்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment