Saturday, August 26, 2017

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ரோகிணி



சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26, 2017, 05:00 AM
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் வா.சம்பத். அவர் தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில், சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாகவும் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றி வந்தவர். இவர் சேலம் மாவட்டத்தின் 171-வது கலெக்டராக பதவி ஏற்கிறார். அத்துடன் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி ஆர்.பாஜிபாகரேயின் கணவர் விஜயேந்திரபிதாரி. இவர் ஐ.பி.எஸ். அதிகாரி. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். தற்போது மத்திய புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் மராட்டிய மாநிலம் சோலாப்பூர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த ரோகிணி, புனேவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். 2008-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக பணியை தொடர்ந்தார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி சென்றவர்களை மடக்கி பிடித்து பீதிக்குள்ளாக்கியவர்.

அதன் பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும் கூடுதல் கலெக்டராகவும் பணியை தொடர்ந்தார். அப்போது மத்திய அரசின், ‘தூய்மை பாரதம்‘ திட்டத்தின்கீழ் சுகாதாரத்தை காக்க, கிராமப்புறங்களில் தனிநபர் கழிவறைகள் கட்டி கொடுக்க அரும்பாடுபட்டார். அதற்காக, ரோகிணிக்கு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகரம் பாராட்டு தெரிவித்தது.

சேலம் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பொறுப்பு ஏற்கலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...