Saturday, August 19, 2017


தாம்பரத்திலிருந்து செங்கோட்டை, நெல்லைக்கு புதிய ரயில்கள் இயக்க முடிவு




தாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு இரண்டு புதிய ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ஒரு ரயிலும் திருநெல்வேலிக்கு 5 ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும் நெல்லைக்கும் இரு புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

புதிய ரயிலின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் முனையத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், ரயில் பாதையில் ஏற்படும் நெருக்கடி காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

இந்த ரயில்களின் பராமரிப்பு பணி அருகில் உள்ள கோபாலபுரம் பணி முனையில் நடைபெறுகிறது. தாம்பரம் சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக மாற்றப்பட்டதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கூடுதல் ரயில்களை இயக்கினால் அவற்றின் பராமரிப்பு பணிகளுக்காக புதிய ரயில்வே பணிமனையை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி முதல் தாம்பரம் 3 வது முனையம் செயல்பட தொடங்கி விட்டது. அங்கிருந்து 2 வாரந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026