Monday, August 14, 2017

FREE JIO PHONE: தொடங்குகிறது முன்பதிவு


ஜியோ ஃபோனை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஜியோ ஃபோன் ஆகஸ்ட் 15 முதல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தைக்கு வரவுள்ளது. 

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள ஜியோ ஃபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பின்னர் செப்டம்பர் முதல் இது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஜியோ ஃபோன் பதிவு செயல்முறை மற்றும் அதைப் பற்றிய விவரங்கள்:ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப் மூலமும், jio.com இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். ஜியோ சிம் கார்டுகள் போலவே இதற்கும், ஆதார் எண் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.அதுவே, நீங்கள் ஒரு வணிக உரிமையாளர் எனில், உங்கள் நிறுவனத்தின் PAN அல்லது GSTN எண்ணை வழங்க வேண்டும்.

நீங்கள் எத்தனை தொலைபேசிகள் வாங்க விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும். உங்கள்விவரங்களைப் பதிவு செய்தவுடன், உங்கள் மொபைல் ஃபோனில் உங்கள் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் கிடைக்கும்ஆ ஃப்லைன் மூலம் முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஜியோ விற்பனையகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.ஜியோ மொபைல் ஃபோன் இலவசமாக, குறைந்த கட்டண பிளான்களுடன் வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார். இந்த மொபைல் ஃபோன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Labels: MOBILE

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...