நாமக்கல் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ காட்சி
By DIN | Published on : 20th August 2017 10:45 PM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் அருகே மோகனூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை வேகமாக வந்த கார் மோதி அந்தரத்தில் தூக்கி வீசும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. அந்த வீடியோ காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.
நாமக்கலைச் சேர்ந்த பிரியா என்ற பெண் மோகனூர் - வேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடப்பதறகாக சீரான வேகத்தில் திரும்ப முயன்றார். அப்போது, வேகமாக வந்த கார் பிரியாவின் மீது இரு சக்கர வாகனத்தில் மோதியது.
கார் மோதிய வேகத்தில் பிரியா பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக பிரியா உயிர்பிழைத்துள்ளார் என்பதுதான் ஆச்சரியம். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment