Tuesday, September 26, 2017

105 கோடி பரிசுத் தொகை வாங்க ஆள் இல்லை: கேரள லாட்டரி சீட் சோகம்!

த.ராம்

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்தது. அதில் முதல் பரிசாக 10 கோடி யாருக்குக் கிடைத்தது எனப் பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடியைச் சேர்ந்த முஸ்தபா என்கிற தேங்காய் வியாபாரிக்குக் கிடைத்தது. அதுபோல அதே ஓணம் பம்பர் லாட்டரியில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு 500 ரூபாய் பரிசு விழுந்தது.



சிலர் லாட்டரி சீட்டு வாங்குவதோடு மட்டும் நின்று விடுகின்றனர். அதற்கு பரிசு விழுந்ததா என்று கூட அவர்கள் பார்ப்பது இல்லை அதிலும் பலர் லாட்டரி சீட்டுகளைத் தொலைத்து விடுகின்றனர். இதனால் பலருக்குக் கிடைக்க வேண்டிய அதிர்ஷ்ட பணம் கிடைக்காமல் போய் விடுகிறது. பஸ் ஸ்டேண்ட்களிலும், ரயில்வே ஸ்டேஷன் அருகிலும் மாற்றுத்திறனாளிகள் லாட்டரி சீட்டுகளை விற்பதால் சிலர் அனுதாபத்திலும் வாங்கிச் செல்கின்றனர். அதை அவர்கள் கவனத்திலும் எடுத்துக் கொள்வது இல்லை. லாட்டரியில் பரிசு விழுந்தால் வங்கியிலோ அல்லது லாட்டரித்துறை அலுவலகத்திலோ டிக்கெட்டை ஒப்படைக்கலாம். லட்ச ரூபாய் வரை பரிசுக்கான தொகையை அந்ததந்த மாவட்ட லாட்டரித்துறை அலுவலகங்களில் இருந்து தொகை வழங்கப்படும்.

அதற்கு மேற்பட்ட தொகையை லாட்டரித்துறை இயக்குநரால் மட்டுமே வழப்படும். பரிசு விழுந்து 30 நாள்களுக்குள் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டும். சில முக்கியமான சூழல்களுல் இதை 90 நாள்களுக்கு அதிகரிக்க லாட்டரித்துறை இயக்குநருக்கு அதிகாரம் உள்ளதாம். லாட்டரி சீட்டை ஒப்படைத்த 30 நாள்களுக்குள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். கேரளாவைத் தவிர்த்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பரிசுத் தொகை விழுந்தால் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னரே பரிசுத் தொகைகளை வழங்குவார்கள்.

இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மட்டும் லாட்டரியில் விழுந்த பரிசுத் தொகைகளை வாங்க ஆள் இல்லாமல் சுமார் 105 கோடி இருப்பதாகத் தகவல் பரவுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025