Friday, September 15, 2017

'ஸ்மார்ட்' கார்டு இல்லாதோருக்கும் ரேஷன் பொருட்கள் உண்டு
பதிவு செய்த நாள்15செப்
2017
01:28




ரேஷன் கடைகளில், 'ஸ்மார்ட் கார்டு' பெறாதோருக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க, ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; ஆனால், பழைய கார்டு வைத்திருப்போருக்கும், பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். தற்போது, காகித ரேஷன் கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள, 1.92 கோடி கார்டுகளில், 28 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, ரேஷன் பொருட்களை வழங்காமல், ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, சென்னையில், பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டு இல்லை என, பொருட்களை தராமல், ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், அலட்சியமாக பதில் கூறுகின்றனர்' என்றார்.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த மாதம் முதல், ஸ்மார்ட் கார்டு வாங்கியோருக்கு, அவற்றில் தான் பொருட்களை வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு இல்லாதோருக்கு, பழைய ரேஷன் கார்டின் கடைசி நான்கு எண்களை, கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்து, பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊழியர்கள், பழைய கார்டுதாரருக்கு பொருட்கள் தர மறுப்பதாக புகார்கள் வருகின்றன.

பாதிக்கப்பட்டோர், உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னையை தவிர்க்க, ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள், தெளிவான புகைப்படம் மற்றும் பிழை திருத்த விபரங்களை உடனே சரி செய்து, விரைவாக அந்த கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...