Monday, September 18, 2017

ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர் கிராமம்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை பெற்றிருக்கிறது, கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவான்டி கிராமம்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை பெற்றிருக்கிறது, அலவான்டி கிராமம். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவர் ஆசிரியர் படிப்பு படித்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அவர்கள் ஆசிரியர்களாக தங்கள் பணியை திறம்பட செய்து வருகிறார்கள்.இந்த கிராமத்தை சேர்ந்த சிவமூர்த்தி சுவாமி அலவான்டி, சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர். அவர்தான் அங்குள்ள மக்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார். ஆரம்பத்தில் அந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு வரையே இருந்திருக்கிறது. 1955-ம் ஆண்டு 7-ம் வகுப்பு வரையும், 1968-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரையும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. 1981-ம் ஆண்டு கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் கிராமத்தில் படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்து விட்டது.

இந்த கிராமத்தைசேர்ந்தவர்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாக அமைந்திருந்தாலும் கல்வி புரட்சியில் தங்களை இணைத்து கொண்டு விட்டார்கள். தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆசிரியர்களாக உருவாக்கி இருக்கிறார்கள்.அலவான்டி கிராமத்தில் 23 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் குருராஜ் பாட்டில், “ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது மூன்று பேர் ஆசிரியர்களாக இருக் கிறார்கள்” என்கிறார். அவர்களை ஆசிரியர்களாக உருமாற்றியதில் தனக்கும் பங்கு இருக்கிறது என்கிற பூரிப்பு அவரிடம் வெளிப்படுகிறது.விரிவுரையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான ஏ.டி கல்மாத், “சுதந்திர போராட்டம் எந்த அளவிற்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியதோ அதேபோல் இந்த கிராமத்தில் கல்வியும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்.அலவான்டியில் 1800 குடும்பங்களை சேர்ந்த சுமார் 8000 பேர் வசிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Tug of war between AI Group & IndiGo for captains

Tug of war between AI Group & IndiGo for captains  NEW FDTL RULES Saurabh.Sinha@timesofindia.com 30.12.2025 New Delhi : Call it the Indi...