'பசங்க படிப்புச் செலவுக்குக்கூட பத்தாது' - போஸ்டர் ஒட்டும் தொழிலாளியின் சோகம்!
கட்சிப் பொதுக்கூட்டம் முதல் கண்ணீர் அஞ்சலி வரை தமிழகத்தில் அனைத்துக்குமே போஸ்டர்தான். அதுவும் சென்னையில் போஸ்டர் கலாசாரம் சற்று அதிகம். தமிழகத்தின் தலைநகரம் என்பதால், இங்கு போஸ்டர்களுக்குப் பஞ்சமில்லை. சினிமா போஸ்டர்கள், அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், வாரப் பத்திரிகைகளின் போஸ்டர்கள் என்று தொடங்கிய போஸ்டர் கலாசாரம் தற்போது மூலம், பௌத்ரம், ஆண்மைக்குறைவு, வேலை வாய்ப்பு போஸ்டர் என்று விரிவடைந்துள்ளது.

சென்னை சாலைகளில் எங்கு திரும்பினாலும் போஸ்டர் மயம்தான். ஆனால், நாம் இங்கு காணப்போவது அந்த போஸ்டர்களைப்பற்றி இல்லை. தினசரி அந்த போஸ்டர்களை கவனிக்கும் நமக்கு, அந்தப் போஸ்டர்களை ஒட்டுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. எனவே, அவர்களின் வாழ்க்கைக்குள் பயணிப்போம் வாருங்கள்.
நேரம் நள்ளிரவு 12.30 மணி: இடம் அண்ணா சாலை
பரபரப்பான அண்ணா சாலையில், வாகனங்களின் எண்ணிக்கை சற்று குறைய, இரவின் முழு அரவணைப்பில் மூழ்கியிருந்தது அண்ணா சாலை. ஜெமினி பாலம் அருகே இரண்டு பேர், தனுஷின் 'வி.ஐ.பி - 2' வெற்றிகரமாக ஐந்தாவது வாரம் என்ற போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்தனர். போஸ்டரை ஒட்டியபடியே நம்மிடம் பேசினார் அரவிந்த்.

இனி அரவிந்த், "10 வருஷமா போஸ்டர் ஒட்டிட்டு இருக்கேன் சார். சாய்ங்காலம் 7 மணிக்கு ஆபீஸ் போவோம். அங்கு ஏரியா பிரிச்சு உடுவாங்க. ஒரு 11 மணிக்கு வேலைய ஆரம்பிச்சா, வேலை முடிய காலைல 7, 8 மணி ஆய்டும். ஆனா, டெய்லி அப்டி கிளம்ப முடியாது. சில நாள் லேட்டாகும். அண்ணா சாலை ஏரியா கொடுத்தா, சைதாப்பேட்டை வரை போஸ்டர் ஒட்டணும். நான் கோடம்பாக்கம் ஏரியா. அதனால, ஜெமினி டு கோடம்பாக்கம் வரை ஒட்டுவேன்.

எங்க ஆபீஸ் ஐஸ் அவுஸ்ல இருக்குது. போஸ்டர் ஒட்றதுக்கு ஆட்டோ குடுத்துவிடுவாங்க. நாங்க மேக்ஸிமம் சினிமா, பத்திரிகை போஸ்டர்கள்தான் ஒட்டுவோம். இந்த அரசியல் கட்சிக்காரங்க போஸ்டர் மேல, நம்ம போஸ்டர் ஒட்றப்பதான் பிரச்னை வரும். நிறை அடி எல்லாம் வாங்கிருக்கேன். எங்களுக்கு வார சம்பளம்தான் சார். ஆறு நாள் வேலை. சண்டே ரெஸ்ட். ஆறு நாளும் வேலை செஞ்சா 3,000 ரூபா கிடைக்கும். சம்பளத்த பெருசா ஏத்திக்கொடுக்க மாட்டாங்க. நமக்கும் இந்த வேலை செட் ஆய்டுச்சு. அதனால அப்டியே ஓடிட்டு இருக்கு வண்டி. சரி சார் டைம் ஆச்சு வரேன்" என்று மின்னல் வேகத்தில் பேசி முடித்துவிட்டு பறந்தார் அரவிந்த்.
நேரம் நள்ளிரவு 1.10 மணி: இடம் லாய்ட்ஸ் ரோடு
ராயப்பேட்டையில், வாரப்பத்திரிகை போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த அன்வர் பாயிடம் பேசினோம். "நமக்கு 20 வருஷமா இதான் வேலை தம்பி. 11 மணி போல வேலை ஆரம்பிப்போம். ஐஸ் அவுஸ்லதான் நம்ம ஆபீஸ். அங்கிருந்து அப்டியே மயிலாப்பூர், திருவான்மியூர் வரை போஸ்டர் ஒட்டுவோம். நம்ம கம்பெனில இந்தப் பத்திரிகை போஸ்டர் ஆர்டர்தான் எடுப்பாங்க. அதனால பிரச்னை இல்லை. பத்திரிகை போஸ்டர் ஒட்றப்ப யாரும் நம்மளை கேள்வி கேட்க மாட்டாங்க.

அரசியல், சினிமா போஸ்டர் ஒட்றப்பதான் பிரச்னை. அரசியல் போஸ்டர் ஒட்றப்ப கட்சிக்காரங்க நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க. சினிமா போஸ்டர் ஒட்றப்ப போலீஸ்காரங்க மீட்டர் போட பார்ப்பாங்க. அவங்கக் கிட்ட எல்லாம் இருந்து எஸ்கேப் ஆகறதுக்குள்ள பேஜார் ஆய்டும். வாரம் 3,000 ரூபா சம்பாதிப்பேன். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க. பையன் காலேஜ், பொண்ணு ஸ்கூல் படிக்கறா. என் வருமானத்த வெச்சு குடும்பத்த முழுசா நடத்த முடியாது. பசங்க சைடுல ஏதாவது வேலை பார்த்துட்டே படிக்கறாங்க" என்றார் வேதனையுடன்.

வேகவேகமாக போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த டெல்லி பாபுவிடம் பேச்சுக் கொடுத்தோம், "நான் ப்ளஸ் டூ படிச்சுட்டு, லேப் டெக்னீஷியனா வேலை செஞ்சுட்டு இருந்தேன். சில காரணங்களால அந்த வேலைய விட்டுட்டு, ஆட்டோ ஓட்ட வந்தேன். ஆனா, அங்கயும் ஓலா, ஊபர் வந்து பொழப்புல மண்ண வாரிப் போட்ருச்சு. அதனால, போஸ்டர் ஒட்ட வந்துட்டேன். இப்ப எங்க கம்பெனிலயே ஆட்டோ ஓட்டிட்டு, போஸ்டரும் ஒட்டிட்டு இருக்கேன்" என்றார்.

No comments:
Post a Comment