Monday, September 18, 2017

பயணச்சீட்டுக் கேட்ட நடத்துனர்; பளாரென்று அறைந்த பெண்; பயந்துபோன பயணிகள்!


பேருந்தில் டிக்கெட் எடுக்குமாறு கூறிய நடத்துனர் ஒருவருக்கு கன்னத்தில் அறைந்த பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையிலிருந்து காமராஜபுரம் வரை செல்லும் பேருந்து ஒன்று, லட்சுமி பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, 5 பேர் அதில் ஏறி உள்ளனர். அவர்கள், ஒரு குழந்தையை விடுத்து, 4 டிக்கெட் மட்டுமே எடுத்தனர்.



அதற்கு நடத்துநர், 3 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிண்டி மகளிர் காவல் நிலைய பெண் காவலர் வித்தியா என்பவர், தான் ஒரு போலீஸ் எனக் கூறி, நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில், பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. தகவல் அறிந்த சக ஓட்டுநர்கள், பேருந்துகளை காவல் நிலையம் முன்பு நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025