Thursday, September 14, 2017

ஓ.பி.சி., வருமான உச்ச வரம்பு அதிகரிப்பு

பதிவு செய்த நாள்13செப்
2017
22:23

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோருக்கு, அரசின் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெறுவதற்கான, வருமான உச்சவரம்பு, எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குழந்தைகள், அந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற, அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது என்ற விதிமுறை அமலில் இருந்தது.

இந்த உச்ச வரம்பை, எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி, மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கான, முறையான அரசாணை நேற்று வெளியானது. இதன் மூலம், எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் பெறும், ஓ.பி.சி., பிரிவினரின் குழந்தைகள், அந்த பிரிவின் கீழ், இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெறலாம்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...