Sunday, September 10, 2017

விழாக்கால சலுகைகளை அறிவிக்க வரிசைகட்டும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்


By DIN  |   Published on : 09th September 2017 11:14 AM  |
Vehiclesales
Ads by Kiosked

சென்னை: இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ, பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புது வாகனம் வாங்க நினைத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் விழாக்காலம்தான்.
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருப்பதை முன்னிட்டு, புதிய வாகனங்களையும், சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
விழாக்கால சலுகையாக பல்வேறு வகைகளில் நுகர்வோரைக் கவர ரூ.71 ஆயிரம் வரை விலையில் சலுகை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2017 ஜிஎஸ்டி நடைமுறை, பிஎஸ் 3 பிரச்னை என பல்வேறு விஷயங்களில் இருந்து வெளியே வந்திருக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்த விழாக்கால சலுகைகளைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
கடந்த ஆண்டு விலையை விட 5-10 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விலையை குறைத்து ஏற்கனவே வாகன விற்பனை நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டன.
மாருதி சுசூகி இந்தியா, தனது ஆல்டோ மற்றும் வேகன்ஆர் ரக வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் செலாரியோ வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் டீலர்களும் இலவச காப்பீடு என பல்வேறு சலுகைகளை இணைத்துள்ளனர்.
நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை சலுகைகளை கார் உற்பத்தி நிறுவனங்களான ஹுண்டாய், ஹோண்டா, எம் அன்ட் எம் நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஹுண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 வாகனத்துக்கு ரூ.60 ஆயிரமும், EON ரக வாகனங்களுக்கு ரூ.55 ஆயிரமும் சலுகை அறிவித்துள்ளது.
மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனமும், தனது வாகனங்களுக்கு 20 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை விலைச் சலுகையும், நிஸ்ஸன் தனது வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.71 ஆயிரம் விலைச் சலுகையும், தங்க நாணயப் பரிசையும் அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் வாடிக்கையாளர்களுக்கு பல்வறு வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...