Monday, September 18, 2017

திருப்பதி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் ஆய்வு

Published : 17 Sep 2017 12:20 IST

திருப்பதி



பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி மலையடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தேவஸ்தான அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதாலும், தசரா விடுமுறை என்பதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திருப்பதி மற்றும் திருமலையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக திருமலையில் வாகனங்கள் நிறுத்த மேலும் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கருடசேவை நாளான 27-ம் தேதி இருசக்கர வாகனங்கள் திருமலைக்கு வர அனுமதி இல்லை என்பதால், திருப்பதி மலையடிவாரத்தில் தேவ்லோக் மற்றும் பவன் பள்ளி வளாகங்களில் 7,500 கார், ஜீப்கள் மற்றும் பைக்குகள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025