Thursday, October 19, 2017

துன்புறுத்திய நபரை பழிவாங்கிய பாம்பு

திருப்பதி: தன்னை துன்புறுத்திய ஒருவரை, மூன்று 
நாட்கள் பின் தொடர்ந்த நாகம், அவரை கொத்தி உள்ளது.
துன்புறுத்திய மனிதர்களை பாம்பு பழி வாங்கும் கதை, தமிழில் வெளிவந்த, 'நீயா' 
படத்தில் காணப்பட்டது. ஆனால், தெலுங்கானா மாநிலத்தில் நிஜமாகவே அது நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள, டேக்குலபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி, சில நாட்களுக்கு முன், நாகம் ஒன்றை துன்புறுத்தி உள்ளார். அதை நினைவில் 
வைத்திருந்த அந்த நாகம், மூன்று நாட்களாக அவரை பின்தொடர்ந்து சென்று தீண்டியது. அவர் எந்த ஊருக்கு சென்றாலும் அவரை கண்டுபிடித்து, அந்த பாம்பு அவரை தீண்டியது. அந்த மூன்று நாட்களும் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, விஷத்தை முறித்ததால் அவரின் உயிருக்கு ஆபத்து நேரவில்லை.
நான்காவது நாளாக அவரை தீண்ட வந்த நாகத்தை பார்த்த கிராம மக்கள், அதை அடித்து கொன்றனர்.

No comments:

Post a Comment

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...