Tuesday, October 24, 2017

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் வட்டி குறைப்பு

2017-10-24@ 00:43:37




சென்னை: வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை எம்சிஎல்ஆர் முறைப்படி நிர்ணயித்து வருகின்றன. இந்த வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), மூன்று மாதம் வரையிலான எம்சிஎல்ஆர் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளும், 6 மாதங்களுக்கு 30 அடிப்படை புள்ளிகளும், ஓராண்டு முதல் மூன்று ஆண்டு வரை 15 அடிப்படை புள்ளிகளும் குறைத்துள்ளது.

அதாவது, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி 8.55 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 6 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி முறையே 8.10 சதவீதம், 8.20 சதவீதம் என இருக்கும். இதன்படி புதிய வீட்டுக்கடன் வட்டி ₹30 லட்சம் வரை 8.40 சதவீதமாக வசூலிக்கப்படும். செப்டம்பரை விட இது 15 அடிப்படை புள்ளிகள் குறைவாகும். புதிய வட்டி விகிதம் இந்த மாதம் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக 3.10.2017 முதல் 31.1.2018 வரை ரத்து செய்து இந்த வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026