Tuesday, October 24, 2017

வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனுக்கள்26,989:அக்., 31 ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு
t
 வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனுக்கள்26,989:அக்., 31 ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு
மதுரை:மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யக் கோரி நேற்று வரை 26 ஆயிரத்து 989 பேர் மனு செய்துள்ளனர். இம்மாதம் 31ம் தேதி வரை மனு செய்யலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.இம்மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அக்., 3ம் தேதி கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டார். இதில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 343 ஆண், 12 லட்சத்து 92 ஆயிரத்து 765 பெண், 120 இதரர் உட்பட 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள் உள்ளனர்.
1.1.17 ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க கோரி தாலுகா, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அக்., 8, 22 தேதிகளில் சிறப்பு முகாம்கள் மாவட்டத்திலுள்ள 2687 ஓட்டுச்சாவடிகளில் நடத்தப்பட்டன. 22ம் தேதி ஒரே நாளில் மட்டும் பெயர் சேர்க்க 8,591, நீக்க 3236, முகவரி மாற்ற 1,157, திருத்தம் செய்ய 830 உட்பட 13,814 மனுக்கள் பெறப்பட்டன. இம்மாதத்தில் நேற்று வரை 26 ஆயிரத்து 989 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: 18 வயது பூர்த்தியானவர்கள் இம்மாதம் 31ம் தேதி வரை சம்பந்தப்பட்ட தாலுகா அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கலர் போட்டோக்களுடன் கூடிய விண்ணப்பங்களை கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம். அனைத்து மனுக்கள் மீதும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விசாரணை நடத்தி பட்டியலில் சேர்ப்பர். அடுத்தாண்டு ஜன., 5ம் தேதி வாக்காளர் பட்டியல் இறுதி பட்டியல் வெளியிடப்படும், என்றனர். மாவட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலுவலரும், நகரமைப்பு திட்ட இயக்குனருமான பீலா ராஜேஷ் இன்று (அக்., 24) மதுரையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026