பல்கலை பதவிகளுக்கு நாளை நேர்காணல் : 'கைப்பற்ற' கடும் போட்டி
பதிவு செய்த நாள்
24அக்2017
00:21
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் உயர் பதவிகளுக்கான நேர்காணல் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.,25, 26) நடக்கிறது. பதவிகளை கைப்பற்ற பேராசிரியர், துறைத் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பல்கலையில் பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், டீன், தொலைநிலை கல்வி இயக்குனர் என உயர் பதவிகளை தற்போது துறைத் தலைவர், பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். துணைவேந்தராக செல் லத்துரை பதவியேற்ற பின், ''பொறுப்பு' பதவிகளுக்கு விரைவில் நிரந்தர நியனம் மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்தார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே துணைவேந்தர் செல்லத்துரையால் 'பொறுப்பு' பதவிகளை பெற்றவர்கள் அதை தக்கவைக்கவோ அல்லது வேறு ஏதாவது பதவியை பெறும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நேர்காணல் முடிந்த மறுநாள் (அக்.,27)
சிண்டிகேட் கூட்டத்தில், பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில், ''வழக்கமான தேர்வு தான். பிற பல்கலைகளில் இதுபோன்ற தேர்வு முடிந்துள்ள நிலையில் இங்கும் நடக்கவுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தபட்சம் 30 பேர் விண்ணப்பித்துள்ளனர். கல்வி தகுதி, அனுபவம், பணியின் போது பிற சாதனை உள்ளிட்டவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வு நேர்மையாக
நடக்கும்,'' என்றார்.

No comments:
Post a Comment