Tuesday, October 24, 2017

மருத்துவம் படித்து அரசியலுக்கு வந்தது ஏன்?: தமிழிசை விளக்கம்

மருத்துவம்,படித்து,அரசியலுக்கு,வந்தது ஏன்,Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்,விளக்கம்
சென்னை: ''இலவச மருத்துவம் வேண்டும் என்பது தான், பா.ஜ., நோக்கம். அதற்காகத் தான், மருத்துவம் படித்து, அரசியலுக்கு வந்தேன்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில், நேற்று, அவர் அளித்த பேட்டி: ஆர்.கே.நகர் தேர்தலில், ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகள், நீக்கப்பட வேண்டும். அடுத்து நடக்கப் போகும் தேர்தல்களுக்கு முன்னோடியாக, ஆர்.கே.நகர் தேர்தல், நேர்மையாக நடத்தப்பட வேண்டும். நடிகர் வடிவேலை, பா.ஜ.,விற்குள் இழுக்க, நாங்கள் முயற்சிக்கவில்லை. இது போன்ற கருத்துக்களை கூறும் திருமாவளவனுக்கு, கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
மெர்சல் படத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பாக தவறான கருத்துக்கள் இருந்ததால், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என, கூறினேன். கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில், விஜய்க்கும், எனக்கும், எந்த பிரச்னையும் இல்லை. இவ்விவகாரத்தில், இன்று காலை வரை, மிரட்டும் வகையிலும், விமர்சிக்கும் வகையிலும், பல தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்தன. இலவச மருத்துவம் வேண்டும் என்பது தான், பா.ஜ., நோக்கம். அதற்காகத் தான், மருத்துவம் படித்து, அரசியலுக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026