Thursday, October 26, 2017

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர்: ஆய்வில் தகவல்


 உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர்: ஆய்வில் தகவல்
சிங்கப்பூர் சிட்டி:உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது.

கனடாவைச் சேர்ந்தை ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம் பல்வேறு முதலீடு , நிதி ஆலோசனை, பாஸ்போர்ட் குறித்த குறியீட்டு சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கிறது.இந்த நிறுவனத்தின் கிளை அலுவலங்கள் உலக நாடுகள் முழுவதிலும் உள்ளது.
இந்த நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டு பிரிவு 2017-ம் ஆண்டில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்டுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.
அதன் விவரம்: 
1. 159 - சிங்கப்பூர்.
2. 158 - ஜெர்மனி
3. 157 - சுவீடன், தென்கொரியா.
4. 156 - டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்.நார்வே, பிரிட்டன், 
5. 155 - லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்சுக்கல், 
6. 154 - மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா, 
7. 153 - ஆஸ்திரேலியா, கிரீஸ், நியூசிலாந்து.
8. 152 - மால்டா, செக் குடியரசு, ஐஸ்லாந்து.
9. 150 - ஹங்கேரி.
10. 149 - சுலேவேனியா, சுலேவாக்கியா, போலாந்து, லுதுவேனியா. லாட்வியா.

சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறியது, சிங்கப்பூர் முதலிடம் பெற்றதற்கு காரணம் அந்நாடு தனது தூதரக உறவுகளை வலுப்படுத்துவதிலும், வெளியுறவு கொள்கைகளில் கவனம் செலுத்துவதும் தான் என்றார்.

வழக்கமாக ஐரோப்பிய நாடான ஜெர்மன் நாடு தான் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்தன. இந்தாண்டு முதன்முறையாக ஆசிய நாடான சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. . இந்தியா 70-வதுஇடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க மிகவும் பின்தங்கியுள்ளதற்கு காரணம் அதிபர் டெனால்டு டிரம்ப் சமீபத்தில் விசா கெடுபிடி காட்டியதே காரணம் என கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...