வேலை பார்த்தபடி டாக்டர்கள் உண்ணாவிரதம்
பதிவு செய்த நாள்
27அக்2017
01:43
புதுடில்லி: ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை, முறையாக அமல்படுத்த வலியுறுத்தி, வேலை பார்த்தபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டது. 'பல்வேறு அரசு மருத்துவமனைகளில், இது அமல்படுத்தப்பட்டாலும், முழுமையாக செயல்படுத்தவில்லை' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளை, நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலை பார்த்த படியே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தில், 2,000 டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

No comments:
Post a Comment