Saturday, October 28, 2017


அமெரிக்கா செல்கிறீர்களா?..புதிய விதிமுறைகள் நாளை நடப்புக்கு வரும்

25/10/2017 18:28

https://seithi.mediacorp.sg/



அமெரிக்கா செல்லும் எல்லா விமானச் சேவைகளுக்குமான புதிய நடைமுறைகள் நாளை நடப்புக்கு வருகின்றன.
பயணிகளின் சோதனைகள் கடுமையாக்கப்படுவதுடன் விமானத்திற்குள் அனுமதிக்கப்படும் மடிக்கணினிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.
புதிய விதிமுறைகளில் பயணிகளிடம் பாதுகாப்புப் பற்றிய சிறிது நேர நேர்காணலும் அடங்கும்.
கடந்த ஜூலை மாதம் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பத்து விமான நிலையங்களில் இருந்து வரும் மின்னணுக் கருவிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டது.
இருப்பினும், பாதுகாப்பை வலுப்படுத்தாத விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் மீண்டும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது.
அப்போது புதிய விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு விமான நிறுவனங்களுக்கு 120 நாள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
புதிய விதிமுறைகள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவுக்கான வர்த்தகத் துறை விமான நிறுவனக் குழுமம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...