Friday, October 27, 2017

காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர்! - வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்
க .தனசேகரன் வீ கே.ரமேஷ்



சேலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை சேலம் ஆயுதப்படை போலீஸ் 7 ஆண்டுகளாகக் காதலித்து குடும்பம் நடத்திவிட்டு இறுதியாகத் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் அந்தப் பெண் இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவருக்குச் சந்துரு என்ற மகனும் தேன்மொழி, கனிமொழி ஆகிய மகள்களும் இருக்கிறார்கள். தங்கத்தின் மூத்த மகளான தேன்மொழிக்குத்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது. இதையடுத்து தேன்மொழியின் உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பிறகு அவர்களைக் காவல்துறையினர் சமரசம் செய்து கலெக்டரிடம் மனு கொடுக்கச் செய்திருக்கிறார்கள்.




தேன்மொழியின் உறவினர் பேபி கெளசல்யா, ''தேன்மொழி பி.ஏ ஆங்கிலம் முடித்துவிட்டு சேலம் ரிலையன்ஸ் மாலில் வேலைபார்த்து வந்தார். சேலம் கோட்டகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்கின்ற முருகன். இவர் சேலம் புறநகர் ஆயுதப்படை போலீஸாக இருக்கிறார். தேன்மொழியும் சீனிவாசனும் 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள்.

சீனிவாசன் தேன்மொழியைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி அவ்வப்போது இரண்டு, மூன்று மாதம் தனியாக வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்தும் இருக்கிறார்கள். அப்போது தேன்மொழியை அடித்துச் சித்தரவதை செய்துள்ளார். அதையடுத்து சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதியாக அஸ்தம்பட்டி ஆயுதப்படை குடியிருப்பில் தேன்மொழியைக் கூட்டிச் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

ஆனால், திருமணம் செய்யச் சொல்லி கேட்டதுக்கு 20 பவுன் கொடு அதுவும் நீ எனக்கு தங்கை முறையாகிறது என்று ஏமாற்றி அடித்து அனுப்பியுள்ளார். இதனால், விரத்தியில் வந்த தேன்மொழி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். அந்த சீனிவாசன் காம கயவனை போலீஸ் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026