Friday, January 19, 2018

மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும் : சுஷ்மா ஸ்வராஜ்

2018-01-19@ 19:23:56

காரைக்கால்: மூத்த குடிமக்கள், 8 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். காரைக்காலில் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், பாஸ்போர்ட் சேவையில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது என்றார். 50 கி.மீ தொலைவில் உள்ள தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைவருக்கும் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026