Wednesday, January 24, 2018

மாணவர்கள் போராட்டம் நடத்த தடை : கல்லூரி, பல்கலைகளில் எச்சரிக்கை

Added : ஜன 24, 2018 00:46

பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் நடத்த, மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறையின் நஷ்டம் காரணமாக, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டணம், அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக, கல்லுாரி, பல்கலை மாணவர்கள், பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, உயர்கல்வித் துறை தடை விதித்துள்ளது. ஒவ்வொரு கல்லுாரிகள், பல்கலைகளில் முதல்வர் மற்றும் துணைவேந்தர்கள் வழியாக, தமிழக உயர்கல்வித் துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட பேராசிரியர்கள், பணியாளர்கள் யாரும் பின்னணியில் செயல்படக் கூடாது. இன்னும் இரண்டு மாதங்களில், மாணவர்களுக்கு பருவத் தேர்வான, செமஸ்டர் வர உள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டு எண் குறைக்கப்படும். வருகை பதிவில் நாட்கள் குறைந்தால், தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படாது. ஒழுங்கீனமான மாணவர்களுக்கு, 'பஸ் பாஸ்' ரத்து செய்யப்படும். இதை, துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எச்சரிக்குமாறு, கல்லுாரி முதல்வர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026