Sunday, January 14, 2018

முதியோர் ஓய்வூதியத்தை தொலைத்து தவித்த மூதாட்டி: சொந்தப் பணத்தில் ரூ.1100 கொடுத்த மனிதாபிமான காவலர்

Published : 12 Jan 2018 22:06 IST

திண்டுக்கல்



பணம் கொடுத்து உதவிய காவலர் வின்சென்டுக்கு நன்றி சொல்லும் மூதாட்டி - படம்: சிறப்பு ஏற்பாடு

முதியோர் ஓய்வூதியத்தை தொலைத்துவிட்டு தவித்த மூதாட்டிக்கு சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து உதவிய மனிதாபிமான காவலரை சக காவலர்கள் பாராட்டினர்.

திண்டுக்கல் கல்நூத்தாம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ராமக்காள் (80). இவருக்கு யாரும் ஆதரவில்லை. மாதாமாதம் அரசு தரும் ரூ.1000 முதியோர் ஓய்வூதியத்தை வைத்து காலம் தள்ளும் நிலையில் உள்ளார். இந்நிலையில் இந்தமாத முதியோர ஓய்வூதியத்தை வாங்கிய ராமக்காள் அந்த பணத்தை தவற விட்டுவிட்டார்.

செய்வதறியாது திகைத்த அவர் தனது பணம் காணாமல் போனது குறித்து புகார் அளிக்க திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்றார். பொதுவாக காவல் நிலையத்தில் தலை காய்ந்தவர்களை அலட்சியமாக நடத்துவார்கள். அதிலும் ராமாக்காள் வயதானவர், சாதாரணமாக ரூ.1000 பணம் காணாமல் போனதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வார்களா? என்ற தயக்கத்துடன் சென்றார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்து நான்கு நாட்களாக அலைந்தவருக்கு அலட்சியமே பதிலாக கிடைத்தது. நேற்று காவல் நிலையம் சென்றவரை தலைமை காவலர் வின்சென்ட் அமரவைத்து என்னவென்று கேட்டார். தான்வைத்திருந்த முதியோர் ஓய்வூதியப் பணம் ரூ 1000 ஆயிரம் தொலைந்து விட்டது, புகார் செய்தும் நான்கு நாட்களாக அலைந்து வருவதாக ராமாக்காள் அழுதபடி கூறியுள்ளார்.

அவர் நிலைமையை புரிந்துகொண்ட தலைமை காவலர் வின்சென்ட் பணத்தை மீட்க முடியாது. ஆனால் அந்த தொகை அந்த மூதாட்டிக்கு பெரிய தொகை. ஆகவே அவர் பிரச்சினையை தீர்க்க ஒரு முடிவெடுத்தார்.

மூதாட்டியை அழைத்த தலைமை காவலர் வின்சென்ட் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபாயை கொடுத்து, வழிச்செலவுக்கு ரூ.100 கொடுத்தும் அவரை அனுப்பி வைத்தார். மூதாட்டி சந்தோஷத்துடன் நன்றி சொல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்தத் தகவல் தெரிந்து காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீஸார் அவரைப் பாராட்டினார்கள். தகவல் பரவவே தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரது மனித நேயத்தை பதிவு செய்தது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...