Tuesday, January 23, 2018

உங்களுக்கு என்ன வகை தொப்பை என்பதை கண்டறியுங்கள்! 

மு.ஹரி காமராஜ்

உடல் மெய்ப்பை என்றால் வயிறு தோல் பை. உடலின் முக்கிய உள்ளுறுப்புகள், உணவு, நீர் எல்லாவற்றையும் பாதுகாக்கின்ற பெரும்பொறுப்பு இந்த வயிற்றுக்கு உண்டு. ஒரு சாண் வயிறு நமது தவறான நடவடிக்கைகளால் விரிவடைந்து மேலும் கீழும் பக்கவாட்டிலும் பருமனடைந்து விரிவதே தொப்பை எனப்படுகிறது. தோல் பை விரிவடைவதால் வருவது தொப்பை. தொந்தி என்றும் கூறப்படுகிறது. வயிறில் இருக்கும் கொழுப்புகள் அதிகமாகி சேர்ந்து விடுவதே தொப்பை உண்டாகக் காரணமாகிறது.




அதிகமான தொப்பையால் மூச்சு வாங்குவதில் தொடங்கி உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய்கள், பக்கவாதம், கேன்சர் என பல நோய்கள் வரக்காரணமாகி விடுகிறது. ஆனால் எல்லா தொப்பைகளும் ஆபத்தானதில்லை என்றே மருத்துவம் கூறுகின்றது. தொளதொளவென்று அசையும் அல்லது பிடித்து இழுக்கும் விதமாக இருக்கும் தொப்பையால் பெரிதாக ஆபத்தில்லை. ஏனென்றால் இந்த வகை தொப்பையில் subcutaneous fat மட்டுமே உள்ளது. இதை எளிதாக குறைக்க முடியும். ஆனால் Visceral fat எனும் கொழுப்பைக் கொண்ட கெட்டியான அசைக்க முடியாத உறுதியான தொப்பைதான் பல நோய்களை உருவாக்கிவிடும். எனவே இந்த வகை தொப்பை வரமால் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.



அதிக நீர், குறைவான உப்பு மற்றும் சர்க்கரை, நேரத்துக்கு சீரான உணவு, உணவினை பிரித்து 5 வேளையாக உண்ணுதல், நல்ல உடற்பயிற்சி போன்றவை தொப்பை வரமால் உதவும். இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், பூண்டு, க்ரீன் டீ, தயிர், சிட்ரஸ், பட்டை போன்றவைகளை உணவில் எடுத்துக்கொண்டால் தொப்பை குறையவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். எனவே உங்களுக்கு என்ன வகை தொப்பை என்பதை கண்டறிந்து உடனே அதை குறைக்கும் வழியை பாருங்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026