Thursday, January 18, 2018


 நாட்டின் தலைநகர் தெரியாத வாரணாசி இளைஞர்கள்

Updated : ஜன 18, 2018

லக்னோ: உ.பி.,யில் உள்ள, வாரணாசியைச் சேர்ந்த, 25 சதவீத இளைஞர்களுக்கு, நாட்டின் தலைநகர் எதுவென்று தெரியவில்லை; 25 சதவீத இளைஞர்களுக்கு, கடிகாரத்தில் நேரம் பார்க்க தெரியவில்லை.
ஏ.எஸ்.இ.ஆர்., எனப்படும், ஆண்டு கல்வி நிலை குறித்த, 2017க்கான அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ள, உ.பி.,யின், வாரணாசியில் உள்ள, கல்வி வளர்ச்சி குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தொகுதியான, வாரணாசியில் உள்ள கல்வியறிவு குறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

* இந்த அறிக்கையில், 14 --- 18 வயதுள்ள இளைஞர்களின் கல்வியறிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 25 சதவீதம் பேருக்கு, நாட்டின் தலைநகர் என்ன என்பது தெரியவில்லை

* 25 சதவீதம் பேருக்கு, கடிகாரத்தில் நேரம் பார்க்கத் தெரியவில்லை

* 74 சதவீதம் பேர், மொபைல் போன் பயன்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில், 40 சதவீதம் பேருக்கு, சாதாரண கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை

* 12.7 சதவீதம் பேர், பள்ளிக்கே சென்றதில்லை

* 51.7 சதவீதம் பேர், வேலைக்கு சென்றுள்ளனர்

* 62 சதவீத இளைஞர்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்தியதில்லை. 67.3 சதவீதம் பேர், இன்டர்நெட் பயன்படுத்தியதில்லை

* 20 சதவீதம் பேருக்கு, தங்கள் மாநிலத்தின் பெயர் தெரியவில்லை

* 80 சதவீதம் பேருக்கு, தேசிய வரைபடத்தில் தங்கள் மாநிலம் எங்குள்ளது என்பதை, அடையாளம் காட்டத் தெரியவில்லை

* அதே நேரத்தில், 91 சதவீதம் பேர், இந்திய வரைபடத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025