Saturday, April 28, 2018

''குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் குற்றமற்றவர்!'' -அலகாபாத் உயர்நீதிமன்றம்
எம்.குமரேசன்


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தன. அப்போது, பணியில் இருந்த டாக்டர் கஃபீல்கான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்து சில குழந்தைகளை காப்பாற்றினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சொந்த பணத்தையே கஃபீல்கான் கொடுத்தார். இக்கட்டான சூழலில் முடிந்த வரை மருத்துவ சேவையாற்றிய அவரை யோகி ஆதித்யநாத் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 7 மாத காலமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.



தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். ஏப்ரல் 25- ந் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கும் கஃபீல்கானுக்கும் எந்த வர்த்தகத் தொடர்பும் இல்லை. குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக நடந்து கொள்ளவில்லை. இதற்கு முன், எந்த குற்றச்சாட்டுகளும் கூட அவர் மீது இல்லாத நிலையில் சாட்சிகளை மிரட்டக் கூடும் என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை' என்று உத்தரவிட்டு கஃபீல்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார்.



சிறையில் இருந்த கஃபீல்கான், ''உத்தரபிரதேச அரசின் தோல்விக்கு தன்னை பலிகடா ஆக்குவதாகவும் தன் குடும்பத்தினரின் உயிருக்கு உத்திரவாதம் இலலை '' என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார் . டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கஃபீல்கானின் மனைவி, அந்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு விநியோகம் செய்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, சிறையில் கஃபீல்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட மறுக்கப்படுவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டினார். இதையடுத்து, கோரக்பூர் சிறை நிர்வாகம் அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற அனுமதியளித்தது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...