Monday, April 30, 2018

'டிக்கெட்' உடன் டாக்ஸி முன்பதிவு : ஐ.ஆர்.சி.டி.சி., துவக்கம்

Added : ஏப் 30, 2018 00:30

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், டிக்கெட் உடன் டாக்ஸியையும் முன்பதிவு செய்து, ஸ்டேஷன்களில் இருந்து பயணிக்கும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகத்தின், இணையதளத்தில், 'இ - டிக்கெட்' முன்பதிவு செய்து, தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, ஐ.ஆர்.சி.டி.சி., பயணியருக்கு சிறப்பு சலுகைகளுடன், பல்வேறு வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.அந்த வகையில், டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, 'டாக்ஸி' முன்பதிவு செய்து, ஸ்டேஷனில் இருந்து பயணிக்கும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணியரின் போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும் விதமாக, தனியார் டாக்ஸி நிறுவனங்களுடன், ஐ.ஆர்.சி.டி.சி., ஒப்பந்தம் செய்துள்ளது. 'இணையதளத்தில், பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, விரும்பிய இடத்துக்கு செல்ல, ஏழு நாட்களுக்கு முன்னரே டாக்ஸி முன்பதிவு செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி., மொபைல் போன் செயலியில் இருந்தும், டாக்ஸி முன்பதிவு செய்யலாம்' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025