Tuesday, September 17, 2019

மருத்துவக் கல்லூரியில் தமிழ்ச்சாரல் துவக்க விழா

Added : செப் 16, 2019 21:16

விக்கிரவாண்டி:  விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் தமிழ்ச்சாரல் துவக்க விழா நடந்தது.

அரசு மருத்துவக் கல்லுாரி, தமிழ் மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி டீன் சங்கர நாராயணன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.முன்னதாக மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், ஆர்.எம்.ஓ., கதிர் முன்னிலை வகித்தனர். தமிழ் மன்ற செயலர் மணிகண்டன் வரவேற்றார்.தமிழ் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நாடகத்தமிழ், ஆடலும், பாடலும் , பாட்டும் கூத்தும், நாட்டுப்புறக் கலைகள், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.கல்லூரி துணை முதல்வர் அனிதா, துறை பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025