Tuesday, September 17, 2019

பூனையை வீட்டில் வளர்க்கலாமா

Added : செப் 17, 2019 01:40

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பூனை வளர்ப்போருக்கு, கால்நடை பராமரிப்பு துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆலோசனை வழங்கினார்.

பூனை வளர்ப்பாளர்கள் எலிகளை பிடிக்கவே அவற்றை வளர்க்கின்றனர். பூனையை கூண்டுகளிலோ, ஒரே அறையில் அடைத்தோ வளர்க்க கூடாது. மீறி வளர்த்தால் சுவாச பிரச்னையால் இறக்க நேரிடும். பூனைகளை அவற்றின் விருப்பம் போல் அனுமதிக்க வேண்டும். நாய்களைப் போல் பூனைகளுக்கு நகங்களை வெட்டி விட்டால் அவை அச்சத்தில் இருளில் சென்று மறைந்து கொள்ளும். நகங்கள் வளர்ந்த பிறகே அந்த இடத்தை விட்டு வரும். ஆண் பூனை வளர்ப்பவர்கள் அவற்றிற்கு விதை நீக்கம் செய்து வளர்த்தால் சிறுநீர் கழித்து வீடுகளில் துர்நாற்றத்தை உண்டாக்காது.

பூனையை கழுத்து மற்றும் முதுகு தோலை ஒரு கையாலும், மற்றொரு கையால் நான்கு கால்களையும் பிடித்து துாக்க வேண்டும். நாய்களை போல் எதை கொடுத்தாலும் பூனை சாப்பிடாது. பூனைகளுக்கு வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை கொடுப்பது அவசியம். பூனை குட்டிகள் 2 மாத வயதை அடையும் போது தாயை விட்டு பிரிந்து வாழும். நோய் வந்தால் பூனை வளர்ப்பாளர்கள் வாய் வழியாக மருந்து கொடுப்பது, மேல் பூச்சு மருந்துகளை உடம்பில் பூசுவதை தவிர்க்க வேண்டும். பூனையிடமிருந்து சில நோய்கள் மனிதர்களுக்கும் பரவும் என்பதால் அவற்றை தடுக்க தடுப்பூசி போட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025