Sunday, September 22, 2019

பல்கலை துணை வேந்தரிடம் உடல் நலம் விசாரித்த கவர்னர்

Added : செப் 21, 2019 21:44

கோல்கட்டா, : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணை வேந்தரை, மேற்கு வங்க கவர்னர், ஜக்தீப் தன்கர், நேற்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, தலைநகர் கோல்கட்டாவில் உள்ள, ஜாதவ்பூர் பல்கலையில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு பெற்ற, மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், கருத்தரங்கத்துக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர், பபுல் சுப்ரியோ கலந்து கொண்டார்.அப்போது, இந்திய மாணவர் சங்கம் உட்பட, பல்வேறு இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அமைச்சரை சிறைபிடித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், கவர்னர் ஜக்தீப் தன்கர் வந்து, அமைச்சரை மீட்டார்.இந்த சம்பவம் நடைபெற்ற போது, பல்கலைக்கழக துணை வேந்தர், சுரஞ்சன் தாஸுக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை, கவர்னர் ஜக்தீப் தன்கர், நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

No comments:

Post a Comment

Universities rush to file patents for rankings, few acquire commercial value

Universities rush to file patents for rankings, few acquire commercial value  Experts urge dismantling siloed research ecosystem to accelera...