Tuesday, November 30, 2021

'பேட்டரி' இல்லாமல் 1,500 பஸ்கள் முடக்கம்


'பேட்டரி' இல்லாமல் 1,500 பஸ்கள் முடக்கம்

Added : நவ 29, 2021 23:29

சென்னை : தமிழகத்தில் 'பேட்டரி' இல்லாமல், 1,500 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனால், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பணப் பலன்களை வழங்குவதிலும், பஸ்களை பராமரிப்பிலும் பெரும் சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக, உதிரி பாகங்கள் வாங்க பணம் இல்லாததால், பழுதடைந்த பஸ்களில் இருந்து கழற்றி மாற்றும் நிலை உள்ளது.

ஆனால், காலாவதியான பேட்டரிகளை அதுபோல மாற்ற இயலவில்லை. ஒவ்வொரு பணிமனையிலும், ஒன்றிரண்டு பஸ்கள் என பேட்டரி இன்றி, தமிழகம் முழுதும் 1,500க்கும் மேற்பட்ட பஸ்கள் முடக்கப்பட்டு உள்ளன. இது போன்ற பிரச்னைகளை சரி செய்து, 100 சதவீத பஸ்களை இயக்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என, ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...