Wednesday, June 14, 2017

Univ VC defends tainted professors
Chennai


Manonmaniam Sundaranar University, based in Tirunelveli, will not suspend or initiate any action against two of its professors booked in a corruption case by the Directorate of Vigilance and Anti Corruption (DV&AC).Vice-chancellor K Baskar said professors S Prabahar and P K Kalyani had faced an internal inquiry and that no violations had been found.“[This] University is an autonomous body and it is not necessary to follow government norms. As far as the university is concerned, they have not committed any mistake,“ Baskar said, when asked if the professors should be asked to step down till the investigation was over.
The issue would be tabled in the next syndicate meeting, he said. The principal secretaries of the state higher education and law departments are the government nominees on the syndicate.
The DV&AC had filed an FIR against Prabhahar, now Controller of Examination, and Kalyani, now head the department of English, on May 22 charging that they denied admission to eligible candidates to MA and M Phil courses in the department during 2011-12, 2012-13, 2013-14 and 2014-2015. The FIR states that the eligible candidates were refused admission in defiance of the state government's reservation policy .
The two were booked under IPC Sections 120 (b) (criminal conspiracy), 465 (punishment for forgery), 468 (forgery for the purpose of cheating) and 471(using a forged document as a genuine one). All the 27 departments had followed the same procedure for the admission like the English department, Baskar said. “The demand for seats in all the courses is very less. There is no violation of any norms,“ he said.
DVAC officials said they were collecting more evidence to strengthen the case and would soon the two professors for questioning soon.
(With inputs from A Selvaraj.)

Meet the family that keeps ink pens relevant


In a world where words are typed, feelings are swiped and emoji re sponses are hyped, some still feel the urge to write. And, in a world where brands of fountain pens like Sailor, Pilot, Montblanc rule the roost, Ranga handcrafted pens in ebonite have carved a niche.M P Kandan, son of Tiruvallur-based craftsman M Pandurangan who owns the brand, takes us to the `one room factory' in his simple house.
Pandurangan, who worked in nib feeder factory when young, began crafting pens five decades ago, because “I don't know any other work...“
He has travelled a long way since working on foot-operated machines, but he hasn't forgotten his origins. An old foot-operated machine he worked on still lies in a corner of the room.“We use it during power shutdowns“ says Kandan.
The brand's customers, Kandan says, are from all over the world. There are many top Indian bureaucrats too. “Most we get through word-of-mouth publicity ,“ he adds and says many are repeat customers. “We've partners and dealers all over the world, with our customer base spread over 100 countries,“ he says. The nibs, in iridium and gold variants, are sourced from Germany-based Bock and the pens assembled as per clients' request. The company , with gold-nibbed pens as its specialty , also makes ball pens.
Each pen can take around two hours to make, based on the request. Whatever your choice -thin or thick, long or short, with ink barrel or ink syringe, and gloss or matte finish -it is fulfilled here.A customer can even send the nib of his her choice to the factory or travel to Tiruvallur and do it personally . Are there challenges? “Well, not much. Everything is organised, so mostly it's smooth,“ says Pandurangan. “ At times customers send us some material and request that we craft a pen from it, which is challenging.“
Kandan, in explanation, says the ebonite rods for the pens are usually available at a length whereas customers send the material just enough to make a pen.“So we have to be extra careful to ensure we do not damage it while finishing.“
Asked about the future, Panduran gan, with a smile, says everyone in his family knows to make pens. For bulk orders he is assisted by Kandan and daughter Rajeswari. His elder daughter Padmavati helped before she relocated after marriage. “My wife Chengilakshmi and daughters help with packaging for bulk orders,“ says Pandurangan.
How much does he make in a day?
“Depends. If most of it is of the same type, we can make up to six pens in a day per person,“ he says.
The most unique pen order they received, Pandurangan says, was the “sugarcane pen“. A regular client, says Kandan, commissioned two sugarcane pens like the bamboo pens in demand now. “They sent us the blanks, which are not so easy to work with. We had to be very careful, and that stressed appa [Pandurangan] a bit. But finally when it was done, everyone was happy,“ Kandan recalls.


அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்களால் தவிப்பு:என்று தீரும் இந்த சோகம்: பயணிகள் கொதிப்பு

பதிவு செய்த நாள்14ஜூன்2017 02:12

முதுகுளத்துார்;முதுகுளத்துார், கமுதி பகுதிகளில் அடிக்கடி நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்களால் வெளியூர்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்துார், கமுதியிலிருந்து மதுரை, ராமேஸ்வரம், சென்னை, திருநெல்வேலி, கோவை உட்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிராம புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் மேற்கூரை சேதத்தால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் பஸ்களில் பயணிக்க முடியாமல் எரிச்சலில் உள்ளனர். பாடாவதியான அரசு பஸ்களால், தனியார் பஸ்களின் வசூல் அதிகரித்துள்ளதால், அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. நேற்று அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி, முதுகுளத்துார், ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு மதியம் 2:00 மணிக்கு சென்ற அரசு பஸ், பேரையூர் பஸ் ஸ்டாப்பில் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் ராமேஸ்வரம் கோயில், ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கு சென்ற அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பயணிகள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் கஜேந்திரன் கூறுகையில், “ உறவினர் இல்ல விழாவிற்கு செல்ல அரைநாள் விடுப்பு எடுத்து, மதியம் 3 :00 மணிக்குள் ராமநாதபுரம் அலுவலகத்திற்கு சென்றுவிடலாம் என அரசு பஸ்சில் பயணித்தால், பாடாவதியாக நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் இழப்பு ஏற்பட்டு, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாகும் அவலம் உள்ளது”, என்றார்.
சைக்கிளை மறக்காத தமிழக அரசு : இன்னும் தொடருது 'படி'

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:27

சிவகங்கை: சைக்கிள் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், பேரூராட்சி அலுவலர்களுக்கு இன்னமும் 'சைக்கிள் படி' என 100 ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன் குடிநீர் வினியோகம், துப்புரவு உள்ளிட்டவற்றை பேரூராட்சி செயல் அலுவலர்கள் சைக்கிளில் சென்று கண்காணித்தனர். அப்போது 'சைக்கிள் படி' வழங்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், பரப்பளவில் பெரிய பேரூராட்சிகளின் செயல்அலுவலர்களுக்கு மட்டும் ஜீப் வழங்கப்பட்டது. ஆனால், பழைய நடைமுறை இன்னும் மாறவில்லை; செயல் அலுவலர், வரிதண்டலர், துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு 'சைக்கிள் படி' என 100 ரூபாய் வழங்கப்படுகிறது. சைக்கிள் படியாக 100 ரூபாய் வழங்கப்படுகிறது.

சாமானியர் கூட சைக்கிளை மறந்து விட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் இன்னும் அதை மறக்காமல் படி வழங்குவது வினோதம்தான்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில்விரைவில் வருமான வரி 'ரெய்டு'

தமிழகத்தில், சில இடங்களில், உயர் மதிப்பு சொத்து பரிவர்த்தனைகள் மறைக்கப்படுவது தெரிய வந்துள்ளதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில், 'ரெய்டு' நடத்த, வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.





இது குறித்து, தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குனர், ஆர்.வி.ரெட்டி கூறியதாவது:

பான்' எண் வாங்க வேண்டும்

வருமான வரிச் சட்டம், '50 சி' பிரிவுப்படி, பத்திரப்பதிவு அலுவலகங்களில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து, வருமான வரித்துறைக்கு, சார் - பதிவாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதே போல், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனை நடந்தால், அவர்களது, 'பான்' கார்டு எண் பெற வேண்டும். ஆண்டுக்கு, 50 லட்சம்ரூபாய்க்கு மேல், பணப் பரிவர்த்தனை செய்தவர் பற்றிய தகவல்களையும், வங்கிகள் தெரிவிக்க வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பரிவர்த்தனை செய்தவர்களிடம், 'பான்' எண் வாங்க வேண்டும்.

சோதனை

நகைக் கடைகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், நகை வாங்குவோர் விபரங்களும், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 'மியூச்சுவல் பண்டு' முதலீடு, வெளிநாடு பயணம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் குறித்த விபரங்களையும்பெறுகிறோம்.
இவற்றில், பத்திரப்பதிவு அலுவலகங்களில், சில முக்கிய பரிவர்த்தனைகள், குறிப்பாக, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் பரிவர்த்தனைகள் மறைக்கப்படுவதாக, தகவல்

வந்துள்ளது. அதனால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு துறைக்கு எச்சரிக்கை

ஆர்.வி.ரெட்டி கூறியதாவது:சமீபத்தில், தமிழக அரசு, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பை குறைத்தது. அப்போது, 'ஜூன், 13 வரை, பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்கு, உச்சவரம்பின்றி ரொக்கமாக பெறலாம்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, எங்களது கவனத்திற்கு வந்தது. உடனே, தமிழக அரசை எச்சரித்தோம்; அதை, திரும்ப பெற ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -
இன்று முதல் மீன் பிடிக்கலாம்!
பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:33

சென்னை: தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வங்க கடல் பகுதியில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால், இன்று மீனவர்கள் உற்சாகத்துடன், மீன்பிடி தொழிலை துவக்குகின்றனர். மீன்களின் இன விருத்தியை கருத்தில் கொண்டு, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட, கிழக்கு கடலோர பகுதியான வங்கக்கடலில், ஆண்டுதோறும், 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இதன்படி, இந்த ஆண்டு தடைக்காலம், ஏப்., 14ல் துவங்கியது; மே, 29ல் முடிவதாக இருந்தது. இந்த தடைக்காலத்தை, மத்திய அரசு, 61 நாட்களாக நீடித்தது. இதன்படி, தடைக்காலம் நேற்று முடிவுக்கு வந்தது. இதனால், மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில், புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியின், கூவத்துார் பேரம் தொடர்பாக, பிரச்னையை கிளப்ப, தி.மு.க., முடிவு செய்திருப்பதால், அமளி நிச்சயம். நாள்தோறும், ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதால், இன்னும், 24 நாட்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதற்கிடையில், ஜி.எஸ்.டி., உட்பட, முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.



தமிழக அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், மார்ச், 16ல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து, மார்ச், 24ல், சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

துவக்கம்

அதன்பின், துறை வாரியாக, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு, ஒப்புதல் பெறுவதற்காக, சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.


இன்று முதல், ஜூலை, 17 வரை, கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ஆளுங்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள், மூன்று அணிகளாக நிற்கின்றனர். பன்னீர் அணி மற்றும் தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஒத்துழைப்பு அளிப்பதுசந்தேகம்.

தகவல்

சசிகலா குடும்பத்தினர், எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்த போது, அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய், கிலோ கணக்கில் தங்கம் வழங்கியதாக, தகவல் வெளியானது.தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த, 'வீடியோ' காட்சிகள், 'டிவி'யில் ஒளிபரப்பானது.

கைது

சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்ப, பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., முடிவு செய்துள்ளது. எனவே, அமளி நிச்சயம் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளும், லஞ்ச புகாரில் தினகரன் கைது, அமைச்சர் வீட்டில் சோதனை உள்ளிட்ட அரசியல் விவகாரங்களும், சபையில் புயலை கிளப்பும் என, கூறப்படுகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி,

சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. அதையொட்டி, சட்டசபையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. அதை, ஆளுங்கட்சி ஏற்குமா என்பது தெரியவில்லை. இந்த விஷயமும், சட்டசபையில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.

முடிவு

இவற்றுக்கு இடையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கான மசோதா உட்பட, பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஓட்டெடுப்பில், அரசுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முழுமையாக ஆதரவு தருவரா என்ற கேள்வியும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -

சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை, மானியக் கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், விவாதத்தில் பங்கேற்று பேசுவர்.அதன்பின், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர், விவாதத்திற்கு பதிலளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
தியாகிக்கு ஓய்வூதியம் வழங்குவதில் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:39

மதுரை: 'தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது,' என 89 வயது தியாகி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வசந்தநகர் பாலகிருஷ்ணன்,89, தாக்கல் செய்த மனு:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றேன். வேலுார் மத்திய சிறையில் 1943 டிச.,23 முதல் 1944 டிச.,23 வரை அடைக்கப்பட்டேன். 

உடன் சிறையில் இருந்த தியாகி மாயாண்டி பாரதி சான்றளித்தார். மாநில அரசு அங்கீகரித்து எனக்கு தியாகி ஓய்வூதியம் வழங்குகிறது. மத்திய அரசின் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தேன். மத்திய உள்துறை செயலர் (சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரிவு) நிராகரித்தார். அதை ரத்து செய்து ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் மனு செய்திருந்தார்.

நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் உத்தரவு: தியாகி மாயாண்டி பாரதி அளித்த சான்றிதழில், மனுதாரர் மீதான வழக்கு, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது மற்றும் குற்றப்பத்திரிக்கை விபரங்களை குறிப்பிடவில்லை என்ற காரணத்தால் மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தியாகி மாயாண்டி பாரதி அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவருடன் சிறையில் இருந்ததற்கான சான்றை, சக கைதிகளுக்கு மாயாண்டி பாரதி வழங்கியதை, பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்று உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.

எப்.ஐ.ஆர்., அல்லது கைது வாரன்ட் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, தியாகிகளிடம் எதிர்பார்க்கக்கூடாது. உடன் சிறையில் இருந்த, தியாகியின் சான்று போதுமானது. தியாகிகளிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது.
மத்திய உள்துறை செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரின் மனுவில் உள்ள சில குறைபாடுகளை மாநில அரசு சரி செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். 

மத்திய அரசு மறு பரிசீலனை செய்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.
கலர் கலராய் துவரம் பருப்பு : கலகலக்குது ரேஷன் கடைகள்

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:31



அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் துவரம் பருப்பு பல வண்ணங்களில் உள்ளது.'ரேஷன் துவரம் பருப்பு தரம் இல்லை' என புகார் எழுந்துள்ள நிலையில் அருப்புக்கோட்டையில் கலர் கலராய் பருப்பு வினியோகிக்கப்படுகிறது. துாசியும் அதிகம் உள்ளதாக நுகர்வோர் புலம்புகின்றனர்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'எல்லோ டால்' என்ற பருப்பை, துவரம் பருப்பில் கலந்து வினியோகிப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ரங்கநாதன் என்பவர் கூறுகையில், ''சிவப்பு, கறுப்பு நிறங்களில் தரமற்ற துவரம் பருப்பு வழங்கப்படுகிறது. துவரம் பருப்பை பிரிப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. கிராமப்புற கடைகளில் இதுபோன்ற பருப்பை அதிகளவில் வழங்குகின்றனர்,'' என்றார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேஸ்வரி கூறுகையில், ''தரமான பருப்புகளைத்தான் வழங்கு கிறோம். தரமற்ற பருப்பு வினியோகம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
சுகாதாரத்துறை நோட்டீஸ் : டாக்டர்கள் அலட்சியம்

பதிவு செய்த நாள்13ஜூன்2017 23:57

'நோட்டீஸ் அனுப்பியும், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தத்தை மீறிய டாக்டர்கள், பணிக்கு திரும்பவில்லை' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர். தமிழகத்தில் உள்ள, 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவம் படிக்கும் அரசு சாராத டாக்டர்கள், படிப்பை முடித்ததும், இரண்டு ஆண்டுகள், கிராமப்புறங்கள் உள்ளிட்ட, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். ஆனால், அவ்வாறு பணியாற்றாமல், அரசுக்கு, 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும், ஒப்பந்தத்தை மீறியதாக, 600க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு, சுகாதாரத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. ஆனால், டாக்டர்கள் பணிக்கு திரும்ப மறுப்பதால், குழப்பம் நீடிக்கிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நோட்டீஸ் பெற்ற எட்டு பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர். மற்ற டாக்டர்கள், அபராதமும் செலுத்தவில்லை; பணிக்கும் திரும்பவில்லை. வருவாய் துறை அதிகாரிகளும், அபராத தொகையை வசூலிப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர். தற்போது உள்ள சட்டத்தால், அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, ஒப்பந்தத்தை மீறும் டாக்டர்கள் மீது கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து, ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

- நமது நிருபர் -


பாமாயில் லாரி கவிழ்ந்து விபத்து : சாலையில் வழிந்தோடிய எண்ணெய்

பதிவு செய்த நாள்13ஜூன்2017 23:15



திருநெல்வேலி: நெல்லை அருகே, பாமாயில் டின்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் எண்ணெய் வழிந்தோடியது. துாத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் இருந்து, பாமாயில் டின்கள் ஏற்றப்பட்ட லாரி, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை, நெல்லை அருகே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது, மோதாமல் இருக்க டிரைவர், லாரியை திருப்பினார். இதில் லாரி தடுப்புச் சுவரில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் லாரியில் இருந்த பாமாயில் டின்கள் கவிழ்ந்து. சாலையில் எண்ணெய் வழிந்தோடியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்த மாப்பிளை நாங்க... பொண்ணு இருந்தா தாங்க!

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:42

'அடுத்த மாப்பிளை நாங்க; பொண்ணு இருந்தா தாங்க' இப்படி ஒரு வாசகத்தை பார்த்தா என்ன நினைக்க தோணும். எதோ ஒன்றை வித்தியாகமாக சொல்ல இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று மட்டும் தெரியும்.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். ஆண்டுக்கும் அது சொந்த, பந்தங்கள் மனதில் நிலைத்திருக்க ஒவ்வொரு விசயத்தையும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. திருமண வைபவத்தில் முக்கிய இடம் அழைப்பிதழுக்கு உண்டு.

'எங்க ஒன்னு விட்ட சித்தாப்பா பெயர் கட்டாயம் இருக்கனும்,' இது அம்மா. 'எங்க மாமா எனக்கு பல உதவி செஞ்ருக்காரு, அவரு பெயர் கட்டாயம் சேர்க்கனும்,' இது அப்பா.

'யாரு பேர போடுவிங்கலோ, இல்லையோ என் வீட்டு சொந்தக்காரங்க பேரை மறந்துராதீங்க அப்பறம் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,' இது அவசரமாக ஆஜரான சகோதரி. இப்படி ஒவ்வொரு உறவுகளின் அன்பு எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் கலவையாக அழைப்பிதழ் அமைகிறது.



பார்த்து, பார்த்து அழைப்பிதழ் தயார் செய்த காலம் மாறிப்போய் அனைத்தும் ரெடிமேட் யுகமாக மாறிவிட்டது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைய காலத்தில் டிஜிட்டல் அழைப்பிதழ்கள் பலரின் கருத்தையும் கவர்ந்து வருகின்றன. எதையும் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் இருக்கும் வரை இந்த உலகத்தில் மாற்றத்துக்கு குறைவிருக்காது. அப்படி ஒரு புதுமையை தான் திருமண அழைப்பிதழில் புகுத்தியுள்ளனர்.
'வாட்ஸ்ஆப்' இன்று உலகங்களின் எல்லைகளை சுருக்கி விட்டதே என்ற சொல்ல வேண்டும். ஆம் அழைப்பிதழ்களும் அதற்கு தப்ப வில்லை. திருமண வரவேற்புக்கு இப்படி ஒரு அழைப்பிதழை தயார் செய்துள்ளனர் குணா, பிரியா ஜோடியின் நண்பர்கள். இந்த அழைப்பிதழில் நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் இறுதியில் தங்களது திருமண கனவுக்கு அச்சாரம் போட்டுள்ளனர் அடுத்த மாப்பிளை நாங்க; பொண்ணு இருந்தா தாங்க என்ற வாசகங்கள் வழியாக இளைஞர்கள்.

குருதி கொடுத்தோர்... உயிர் கொடுத்தோரே! இன்று உலக ரத்த தானதினம்

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:08




ரத்த தானத்தின் அவசியம் மற்றும் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 14ல் 'உலக ரத்த தான தினம்' கடைபிடிக்கப்படுகிறது. 'நீங்கள் என்ன செய்ய முடியும்? ரத்த தானம் செய்யுங்கள். இப்பொழுது செய்யுங்கள். அடிக்கடி வழங்குங்கள்'
என்பது தான் இந்த ஆண்டின் மையக்கருத்து.உலகளவில் அவசர நிலையின் போது ரத்தம் கிடைக்காமல், கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் 25 கோடி பேர் அவசர நிலையை சந்திக்கின்றனர். இவர்கள் காப்பற்றப்பட வேண்டும் எனில் ரத்ததானம் அவசியம்.11.2 கோடி: உலகளவில் ஆண்டுக்கு 11.2 கோடி பேர் மட்டும் ரத்த தானம் செய்கின்றனர். இதில் சரிபாதி, அதிக வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

32: அதிக வருமானம் உடைய நாடுகளில், 1000 பேரில் 32 பேர் ரத்ததானம் செய்கின்றனர். இத நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் 15 ஆக உள்ளது. ஏழை நாடுகளில் 5 ஆக உள்ளது.

3: தானாக முன்வந்து இலவசமாக வழங்குதல், உறவினர்களுக்காக வழங்குதல், பணத்துக்காக வழங்குதல் என மூன்று வழிகளில் ரத்ததானம் வழங்கப்படுகிறது.

57 : 57 நாடுகள், நுாறு சதவீதமும் இலவச தானம் மூலம் ரத்தம் சேகரிக்கின்றன. 74 நாடுகள் 90 சதவீதம் இலவச ரத்ததானத்தை சேகரிக்கின்றன.

13,000 : 176 நாடுகளில் 13,000 ரத்த மையங்கள் மூலம் 11 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர்.

18 -- 60 : நல்ல உடல்நிலையில் உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் சோதனை செய்த பின் ரத்ததானம் செய்ய வேண்டும்.

350 : சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது 350 மி.லி., ரத்தம் மட்டுமே உடம்பில் இருந்து எடுத்துக் கொள்ளப்
படுகிறது. இதுவும் இரு நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டு விடுகிறது. இரு மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவுக்கு வந்து விடுகிறது.

3: மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும் ரத்த தானம் செய்யும் போது சீரடைகிறது.

4 : ஒரு ஆண்டுக்கு பெண்கள் 3 முறையும், ஆண்கள் 4 முறையும் ரத்ததானம் செய்யலாம்.
'நீட்' தேர்வு விடைக்குறிப்பு நாளை வெளியீடு

பதிவு செய்த நாள்13ஜூன்2017 23:17

'நீட்' தேர்வு முடிவை வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., நாளை வெளியிடுகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல் நடத்தப்பட்டது. தேர்வு நடத்தும் முறை, தேர்வின் வினாத்தாள் குறித்து, வழக்குகள் தொடரப்பட்டன. அதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, விடைத்தாள் நகல், நேற்று, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியானது. விடைத்தாள் நகலின் மீது, இன்று மாலை, 5:00 மணிக்குள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், தேர்வுக்கான விடைக்குறிப்பு, நாளை வெளியாகிறது.

- நமது நிருபர் -
காஞ்சிபுரம் வந்தார் ஜனாதிபதி பிரணாப் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்

பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:38




காஞ்சிபுரம்: டில்லியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று, தரிசனம் செய்தார். ஸ்ரீசங்கர மடம் சென்ற அவர், சங்கராச்சாரியார்களிடம் ஆசி பெற்றார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம், 24ல், காஞ்சிபுரம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர், காஞ்சிபுரம் வந்தார். இதற்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள், கடந்த சில நாட்களாகவே நடந்தது.திட்டமிட்ட படி, டில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில், வேலுார் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள, 'ராஜாளி' கடற்படை தளத்திற்கு, பகல், 1:30க்கு அவர் வந்தார். அங்கிருந்து, குண்டு துளைக்காத காரில் சாலை வழியாக, 2:30 மணிக்கு, காஞ்சிபுரம் வந்தார். காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, பூங்கொத்து கொடுத்து, வரவேற்றனர். விருந்தினர் மாளிகையிலிருந்து, பட்டாடை உடுத்தி, காமாட்சியம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.

கோவில் வாசலில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, பிரணாப் முகர்ஜிக்கு பொன்னாடை அணிவித்து, வரவேற்றார். காமாட்சியம்மன் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பேட்டரி காரில் ஏறி, கோவிலுக்குள் சென்றார். காமாட்சியம்மனை தரிசித்த பின், பேட்டரி காரில் கோவிலை சுற்றிப் பார்த்தார். தரிசனம் முடிந்த பின், கோவிலிலிருந்து புறப்பட்டு, 3:50 மணிக்கு ஸ்ரீசங்கர மடம் வந்தார். அங்கு, ஜனாதிபதியை, விஜயேந்திரர்
வரவேற்றார். மடத்திற்குள் சென்று, ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரிடம், பிரணாப் முகர்ஜி ஆசி பெற்றார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. ஸ்ரீசங்கர மடத்திலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜி, காரில் ஏறி, அரக்கோணம், ராஜாளி கடற்படை தளம் சென்று, டில்லி
புறப்பட்டார்.ஜனாதிபதி வருகையை ஒட்டி, அரக்கோணம் சாலை மற்றும் காஞ்சிபுரம் முழுவதும், வடக்கு மண்டல, ஐ.ஜி., ஸ்ரீதர் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிரணாப் வருகையால், நகரில், இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது. எனினும், இயல்பான போக்குவரத்து மற்றும் பிற செயல்பாடுகள் இருந்தன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:31

'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

'அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. 

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை.
எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது. 

எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை மத்திய அரசு முடிவு செய்யும்'

பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:21

சென்னை: ''எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், பேச முடியாத, செவித்திறன் இழந்த, 200 குழந்தைகளுக்கு, காது நுண் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை நடந்தது. இவர்களுக்கு, செவித்திறன் செயல்பாட்டை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவங்கி வைத்தார்.
உள்நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்ததுடன், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தையும், அவர் பார்வையிட்டார்.

பின், முதல்வர் பழனிசாமி கூறுகையில், ''அனைத்து மாவட்டங்களுக்கும், அம்மா முழு உடல் பரிசோதனை மையம் விரிவுபடுத்தப்படும். சென்னையில், இதுவரை, 16 ஆயிரத்து, 700 பேர் பரிசோதனை செய்து, பயன் பெற்றுள்ளனர். ''எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்து, மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. அதில், எங்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு முடிவு செய்யும்,'' என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில், 1.57 கோடி பேருக்கு, மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சிறுவயதிலேயே வாய் பேச முடியாத, செவித்திறன் இழந்த குழந்தைகளுக்கு, காது நுண் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 2,856 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். ''இவர்களுக்கு, கருவி பொருத்துதல் மற்றும் ஓராண்டு பேச பயிற்சி அளித்தல் சிகிச்சை, 220.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
புதிய ரூ.500 நோட்டு அறிமுகம்  புழக்கத்தில் உள்ளதும் செல்லும்
புதுடில்லி, :புதிய வரிசை உடைய, 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.



கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016, நவ., 8ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

வித்தியாசம் கிடையாது

இந்நிலையில், புதிய வரிசை கொண்ட, 500 ரூபாய்நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி, நேற்று அறிவித்தது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வெளியிடப்பட்டுள்ள மஹாத்மா காந்தி வரிசையிலான, 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதில், நோட்டின் முன்பக்கத்தில் மேல் இடது மற்றும் கீழ் வலதுபக்கத்தில் உள்ள நோட்டின் வரிசை எண்களுக்கு இடையில், 'E' என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றுள்ளது.தற்போது, 'A' என்ற ஆங்கில எழுத்துடன் கூடியபுதிய வரிசை நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்துடன் கூடிய புதிய நோட்டுகளில், அச்சிடப்பட்ட ஆண்டாக, 2017 குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி, புழக்கத்தில் உள்ள நோட்டுகளுக்கும், இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும்.
உயரும்...!   ஜி.எஸ்.டி., அமலால் மருந்துகளின் விலை...
2.29 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு


புதுடில்லி, : வரும் ஜூலையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் போது, பெரும்பாலான, அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை, 2.29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.



நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றியது. மாநில, ஜி.எஸ்.டி., மசோதாக்களை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், சட்டசபைகளில் நிறைவேற்றி வருகின்றன. ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி.,யை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதிகரிக்கும் அபாயம்

இதற்கிடையே, மருந்து பொருட்களின் விலை, ஜி.எஸ்.டி., அமலால் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போதுள்ள வரி முறைப்படி, மருந்து பொருட்கள் மீது, 9 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான மருந்து பொருட்கள் மீது, 12 சதவீதம் வரி விதிப்பதென, மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது. இதனால், இவற்றின் விலை, 2.29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும், இன்சுலின் போன்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே, இவற்றின் விலை குறையும் என, தெரிகிறது.

எவ்விதம் மாற்றி கணக்கிடுவது

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், ஹெபாரின், வார்பரின், டில்டியாஸெம், டையாஸெபம், இபுபுரூபென், புரொப்ரனலால்,இமாடினிப் உள்ளிட்டவை உள்ளன.

மருந்து பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான, என்.பி.பி.ஏ., பட்டியலிடப்பட்ட மருந்துகளின், தற்போதைய விலையை, ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படும் போது, எவ்விதம் மாற்றி கணக்கிடுவது என்பதற்கான விதியை வகுத்துள்ளது.
கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலை, ஜி.எஸ்.டி., வரிகள் தவிர்த்து, புதிய அதிகபட்ச விலையாக
இருக்கும்.பட்டியலிடப்படாத மருந்து களின் மீது, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் அதிகரிக்கும் விலை வித்தியாசத்தை, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என, என்.பி.பி.ஏ., உறுதியாக கூறியுள்ளது.
இன்சுலின் போன்ற மிக அத்தியாவசியமான மருந்துகள் மீது, ஜி.எஸ்.டி., வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மருந்துகள் மீது, ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் கிடைக்கும் லாபத்தை, நுகர்வோருக்குகண்டிப்பாக அளிக்க வேண்டும் என, என்.பி.பி.ஏ., திட்டவட்டமாக கூறியுள்ளது.

வதந்திகளை நம்பாதீங்க!

'ஜி.எஸ்.டி., கண்டிப்பாக, ஜூலை, 1ல்அமல்படுத்தப்படும். இதில் தாமதம் ஏற்படும் என, கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:நாடு முழுவதும், ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கடைசி வர்த்தகர் வரை, ஜி.எஸ்.டி., குறித்த தகவல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாநில அரசுகளுடன் சேர்ந்து, சி.பி.இ.சி., எனப்படும், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம், சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.என்., நிர்வாகதுணை தலைவர் நியமனம்

ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமல்படுத்த, தகவல் தொழிற்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்தி தரும் அமைப்பான, ஜி.எஸ்.டி.என்., சேவைகள் பிரிவுக்கு, நிர்வாக துணைத் தலைவராக, மூத்த அதிகாரி காஜல் சிங், நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த, 1992ல், இந்திய வருவாய் சேவை அதிகாரியாக தேர்ச்சி பெற்ற காஜல் சிங், ஜி.எஸ்.டி.என்., நிர்வாக துணைத் தலைவராக, மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்

பதிவு செய்த நாள்14ஜூன்2017 03:53



லக்னோ: 'பட்டமளிப்பு விழாவின்போது, கறுப்பு நிற கவுன் அணியும் பிரிட்டிஷ் கால நடைமுறைக்கு மாற்றாக, பாரம்பரிய உடையான, பைஜாமா, குர்தா, சுடிதார் அணிய வேண்டும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., கூறியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ளது, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம். வரும், 15 மற்றும் 16ல், இதன் பட்டமளிப்பு விழா நடக்கிறது.

ஐ.ஐ.டி.,யின் பொன்விழாவையொட்டி நடக்கும் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில், டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.வழக்கமாக, பட்டமளிப்பு விழாவில், கறுப்பு கவுன் அணியும் பழக்கத்துக்கு விடுதலை கொடுக்கும் வகையில், கான்பூர் ஐ.ஐ.டி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நம் பாரம்பரிய உடைகளான, பைஜாமா, குர்தாவை மாணவர்களும், சுடிதாரை மாணவியரும் அணிந்து, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கலாம். அவரவர் தேர்ந்தெடுத்துள்ள துறைக்கு ஏற்ப, கழுத்தில் அணியும் ரிப்பன் அளிக்கப்படும். பொன்விழா என்பதால், பேராசிரியர்களும், கறுப்பு கவுனுக்கு பதிலாக, பொன்நிறத்தினால் முழுநீள கவுனை அணியலாம். நம் கலாசாரத்துக்கு ஏற்ற காலணியை அணிந்து வரலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர் மற்றும் பெற்றோர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தேசிய செய்திகள்
பீகாரில், கணவரை பாம்பு கடித்தது; மனைவியை கணவர் கடித்தார் ஒன்றாக சாக விரும்பியும் மனைவி மட்டும் உயிர் பிழைத்தார்



பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பிர்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய். அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு வி‌ஷப்பாம்பு கடித்து விட்டது.

ஜூன் 14, 2017, 05:00 AM

பாட்னா,


திடுக்கிட்டு எழுந்த அவர், தன்னை வி‌ஷப்பாம்பு கடித்ததையும், தன்னால் உயிர் பிழைக்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார். தன் மனைவி அமிரி தேவி மீது உயிரையே வைத்திருந்த அவர், மரணத்திலும் மனைவியை விட்டு பிரியக்கூடாது என்று முடிவு எடுத்தார்.

அதனால், மனைவியிடம் சென்று வி‌ஷயத்தை சொல்லிவிட்டு, ‘உன்னை பெரிதும் நேசிக்கிறேன். உன்னுடன் சேர்ந்து சாக விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மனைவியின் கை மணிக்கட்டை, வி‌ஷம் ஏறிய தனது பல்லால் கடித்தார். மனைவியும் அதற்கு மகிழ்ச்சியுடன் உடன்பட்டார்.

அடுத்த சில நிமிடங்களில், இருவரும் மயங்கி விழுந்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள், இருவரையும் உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சங்கர் ராய் உயிரிழந்தார். அவருடைய மனைவி அமிரி தேவியின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர். அவர் நலமுடன் இருப்பதாக அவர்கள் கூறினர்.

இதனால், மனைவியுடன் சேர்ந்து சாக வேண்டும் என்ற கணவரின் இறுதி ஆசை நிராசை ஆனதுதான் பரிதாபம்.
மாநில செய்திகள்
கடப்பாரையால் அரசு ஊழியரை அடித்து கொன்ற மனைவி; குடித்து விட்டு வந்து தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம்



மது குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்த அரசு ஊழியரை அவரது மனைவியே கடப்பாரையால் அடித்து கொலை செய்தார்.

ஜூன் 13, 2017, 06:00 AM

அரியாங்குப்பம்,
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மாஞ்சாலை அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் இசைமணி (வயது 45). இவர் சமூக நலத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கோமதி (41) என்ற மனைவியும், இளஞ்செழியன் (23), இசைவேந்தன் (21) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இசைமணி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடன் கோபித்துக் கொண்டு கோமதி தனது தங்கை வீட்டில் போய் தங்கி இருந்தார். இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இசைமணி குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதை தட்டி கேட்டதால் அவருக்கும், கோமதிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.நள்ளிரவு 12 மணிக்கும் மேல் தகராறு இவர்கள் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கணவரின் செயலால் பொறுமை இழந்த கோமதி ஆவேசம் அடைந்து, அவரை தாக்கினார். இதில் இசைமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது கதவில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி விழுந்ததில் இசைமணி காயமடைந்தார். கடும் ஆத்திரத்தில் இருந்த கோமதி ரத்தம்வடிந்த நிலையில் கிடந்த அவரை வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து வந்து தலையில் அடித்ததாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த இசைமணி அங்கேயே சரிந்து விழுந்தார். இதன்பின் வீட்டின் மொட்டை மாடிக்கு கோமதி சென்றுவிட்டார். அதிகாலை 3 மணியளவில் கோமதி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இசைமணி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது தான் குடிபோதையில் வந்து தகராறு செய்த போது இசைமணியை அவரது மனைவி கோமதி கடப்பாரையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.இதுபற்றி தகவல் அரியாங்குப்பம் தெற்கு பகுதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த இசைமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்தனர்.
மாநில செய்திகள்
“வீடியோ காட்சியில் இருப்பது நான்; குரல் என்னுடையது அல்ல” எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி


“வீடியோ காட்சியில் இருப்பது நான்; ஆனால் குரல் என்னுடையது அல்ல” என்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விளக்கம் அளித்தார்.

ஜூன் 14, 2017, 05:15 AM
சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டாக அ.தி.மு.க. பிளவுபட்டு நின்ற நேரத்தில், சசிகலாவை ஆதரிப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறிய வீடியோ காட்சி நேற்று முன்தினம் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த எம்.எல்.ஏ. சரவணன் நேற்று சென்னை வந்து, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து விளக்கம் அளித்தார். பின்னர், வெளியே வந்த எம்.எல்.ஏ.சரவணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த சம்பவத்தை பற்றி என்னிடம் விசாரித்தார். நடந்ததை கூறினேன். அந்த சம்பவமானது முற்றிலும் தவறானது, பொய்யானது. நான் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை.

தவறான தகவல்கள்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், நான் கட்சி மாறி போய்விட்டேன், வேறு அணிக்கு போய்விட்டேன் என்று கூறினார்கள். அப்போது, நான் அந்தக் கூட்டத்தில் தான் இருந்தேன்.

இந்த மாதிரி கடந்த 10 நாட்களாக தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. நானும் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். நேற்று வெளியான வீடியோ காட்சி தவறானது என்பதை ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்து கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சரவணன் அளித்த பதில்களும் வருமாறு:-

குரல் என்னுடையது கிடையாது

கேள்வி:- அப்படி என்றால் எதுவும் நடக்கவில்லையா?. அந்த வீடியோவில் வெளியான காட்சி உண்மை இல்லையா?.

பதில்:- அது நான் பங்கேற்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி. எதுவென்று ஞாபகம் இல்லை. பழைய நிகழ்ச்சி. அதில் இருப்பது என்னுடைய குரல் கிடையாது. மிமிக்ரி, டப்பிங் செய்து, போலியாக வெளியிடப்பட்டுள்ளது.

கேள்வி:- குரல் உங்களுடையது கிடையாது என்றால், அந்த வீடியோவில் இருப்பது நீங்கள் தானே?.

பதில்:- ஆமாம். வீடியோ படத்தில் இருப்பது நான் தான். பழைய வீடியோ. ஆனால், அந்த குரல் என்னுடையது கிடையாது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3 கூட்டணி தலைவர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்களை பற்றியும் நான் பேசியது மாதிரி கருத்து வந்திருக்கிறது. அதுவும் முற்றிலும் தவறான பொய்யான கருத்து. அந்த தலைவர்களை பற்றி நான் பேசவே இல்லை. எந்த நிகழ்வு பற்றியும் பேசவில்லை. அது தான் உண்மை.

யார் என்றே தெரியாது

கேள்வி:- டி.வி. நிருபர் ஷானவாசிடம் நீங்கள் பேட்டியளிக்க வில்லையா?.

பதில்:- ஷானவாஸ் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது.

கேள்வி:- அப்படி என்றால் இதுகுறித்து நீங்கள் போலீசில் புகார் அளிக்க போகிறீர்களா?.

பதில்:- கண்டிப்பாக புகார் அளிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இதுகுறித்து கிரிமினல் வழக்கு தொடர இருக்கிறோம்.

கேள்வி:- அப்படி என்றால், ஏன் இவ்வளவு தாமதமாக விளக்கம் தருகிறீர்கள்?.

பதில்:- வீடியோ வெளியான தகவல் நேற்று இரவு 8 மணிக்கு எனக்கு கிடைத்தது. நான் அப்போது சென்னைக்கு தான் கிளம்பிக்கொண்டிருந்தேன். நாளை (இன்று) சட்டமன்ற கூட்டம் இருப்பதால் அதில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டேன். அதனால், அந்த வீடியோவை என்னால் உடனே பார்க்க முடியவில்லை. இன்று தான் பார்த்தேன். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விசாரித்தார். உரிய விளக்கத்தை நான் கொடுத்திருக்கிறேன்.

சட்டப்படி நடவடிக்கை

கேள்வி:- அப்படி என்றால் வீடியோவில் பேசியது யார்?.

பதில்:- அது எனக்கு தெரியாது.

கேள்வி:- நீங்கள் தான் பேசியதாக சொல்லப்படுகிறதே?.

பதில்:- அது தவறானது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துகிறோம்.

இவ்வாறு சரவணன் கூறினார்.
மாநில செய்திகள்

வீடியோ பேச்சு வெளியீடு:“எம்.எல்.ஏ. சரவணனிடம் உரிய விளக்கம் கேட்டு இருக்கிறோம்” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எம்.எல்.ஏ. சரவணன் கூறிய வீடியோ பேச்சு வெளியானது குறித்து அவரிடம் உரிய விளக்கத்தை கேட்டு இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜூன் 14, 2017, 05:00 AM
சென்னை,

மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் பேசியபோது ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சி என்று கூறி, ஆங்கில தொலைக்காட்சியான ‘டைம்ஸ் நவ்’ நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்த வீடியோ பதிவில் எம்.எல்.ஏ. சரவணன், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது, சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக சென்னையை அடுத்த கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான இந்த காட்சிகள், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ஆனால், இதற்கு எம்.எல்.ஏ. சரவணன் மறுப்பு தெரிவித்தார்.

அதாவது, “அந்த வீடியோவில் வெளியான எந்தக் கருத்தையும் நான் சொல்லவில்லை. எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை” என்று எம்.எல்.ஏ. சரவணன் கூறினார்.

ஆலோசனை

தற்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியில் எம்.எல்.ஏ. சரவணன் இருந்து வருகிறார். எனவே, இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்பதற்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு நேற்று காலை பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் குவிந்தனர்.

அப்போது, வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்களும் வருமாறு:-

விளக்கம் கேட்டு இருக்கிறோம்


கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக, எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ ஆதாரம் வெளியாகி இருக்கிறதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:- சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாக நேற்று தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோ காட்சி குறித்து, அவரே உரிய விளக்கம் தந்திருக்கிறார். நாங்களும் அவரிடம் உரிய விளக்கம் கேட்டிருக்கிறோம்.

கேள்வி:- அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா?

பதில்:- அவரிடம் உரிய விளக்கத்தை கேட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, நிருபர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவர் எதற்கும் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

நேரில் விளக்கம்

இந்த நிலையில் அதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விளக்கம் அளிப்பதற்காக சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேற்று காலை சரவணன் வந்தார்.

பிற்பகல் 12.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார். அப்போது அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி நிர்வாகிகள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது நிருபர்கள், சரவணன் எம்.எல்.ஏ. உங்களிடம் விளக்கம் அளித்தாரா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘வீடியோ குறித்து எங்களிடம் சரவணன் எம்.எல்.ஏ. விளக்கம் கொடுத்து இருக்கிறார்’ என்றார். அதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறதா?, சரவணன் எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டு உண்மையா? என்று கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் அந்த கேள்விகளுக்கு அவர் பதில்கூற மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் சென்றுவிட்டார்.

Tuesday, June 13, 2017

Now, you can get power connection in just a day

By Express News Service  |   Published: 13th June 2017 02:03 AM  |  

CHENNAI: Low-tension domestic and commercial consumers will be able to get electricity connection in just one day under a new scheme that is all set to be rolled out from July 1. This one-day service connection scheme will not be open to special and multi-storeyed buildings, said State Electricity Minister P Thangamani, who announced the scheme in Chennai on Monday.

“The service connection, that can be applied for through the Tangedco web-portal www.tangedcogov.in or in person, will be made available on the same day for buildings within 100 feet from Tangedco’s electricity mains or within a maximum of 48 hours in cases which involve laying of underground service connection cable,” said the minister.

Those applying for domestic services may pay `1,600 for single-phase connections and `4,450 plus initial consumption charges for three-phase connections, and commercial service charges of `1,600 and `3,050 plus initial consumption charges respectively, online.

Asked whether the recent power outages were due to deficit, the minister said there had been no deficit in Tamil Nadu since 2015. “In fact, we have a surplus of 3000 MW.” 
M Sai Kumar, chairman and managing director, Tangedco, was also present at the meeting.
Outage info through SMS
Tangedco, under the ‘Minsara Nanban’ scheme, will now send SMSes to consumers about scheduled and unscheduled power outages in their locality.Launching the scheme on Monday, Electricity Minister P Thangamani said that the customer-friendly initiative in line with the Centre’s ‘Urja Mitra’ scheme, would provide information of power outages due to maintenance activities in rural and urban areas. “The messages would be sent two days before the shutdown. In case a shutdown is due for Wednesday, the consumer would be informed of it on Monday,” said a spokesperson for the State discom.

HoD, two others arrested for question paper leak


By B Anbuselvan  |  Express News Service  |   Published: 13th June 2017 02:10 AM  |  

TIRUVANNAMALAI : The Vellore Crime Branch Crime Investigation Department (CB-CID) arrested three persons, including the Head of the Department (HoD), one professor and an office assistant of Padalesuwarar Polytechnic College in Cuddalore for allegedly leaking the question paper of third semester Diploma in Mechanical Engineering (DME) course. 

The vice-principal, who is among the accused, is absconding.
Police said the question paper on ‘Strength of Materials’, a third semester subject of the DME course, was circulated among the polytechnic students in Arani through WhatsApp  on April 16. 
The matter came to the notice of the authorities after a second year DME student of Dr MGR Polytechnic College in Arani alerted college principal Arumugan. 

When the principal cross-checked the question paper at the examination hall with that of the leaked paper, he found that both were one and same. Arumugan immediately lodged a complaint at Arani Taluk Police Station. Subsequently, the case was transferred to Vellore CB-CID.Police sources said they narrowed in on the culprits by questioning the polytechnic students in Arani, Cuddalore and Panruti. 

After monitoring the WhatsApp trail of the question paper, a CB-CID team led by Deputy Superintendent of Police K Chandrasekaran finally found out that the paper was leaked by the staff of Padalesuwarar Polytechnic College in Cuddalore. 

Chandrasekaran told Express that Vice-Principal Vinoth Kumar took the question paper after opening the room where it was kept by using the office keys and made a photocopy of it with the help of office assistant Rajesh and two other academic staff. Rajesh sold it to a former student.
The CB-CID sources said Rajesh sold the question paper for `5,000 to a former student of the college. 
The former student then sold it to other students, who spread it through WhatsApp. “We suspect that a teachers’ gang might have sold the question papers of other subjects as well. However, no complaint has been received in this regard,” said a Crime Branch-Crime Investigation Department officer.

The police have booked vice-principal Vinoth Kumar (45), HoD of Electronic and Communications Madhu (30), Electrical and Electronic Engineering Department Professor Amba Sankar (32) and office assistant Rajesh (32).Except Kumar, the other three accused in the case have been arrested and remanded in judicial custody.

திருமலையில் புதிய தரிசன வரிசை அமல்

By DIN  |   Published on : 12th June 2017 10:27 AM  |   
tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் புதிய தரிசன வரிசை அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் காண வரும் பக்தர்கள் காத்திருப்பு அறைகளைக் கடந்து ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த பின், தரிசனத்துக்காக கோயிலுக்குள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் 2 தரிசன வரிசைக்குள் அனுப்பி வருகின்றனர். ஒன்று கொடிமரம், வெள்ளி வாயில் வழியாக தங்க வாயிலை அடைந்து தரிசனத்துக்குச் செல்வது. மற்றொன்று மகாதுவாரம் அருகில் உள்ள படிகாவலி இடதுபுறம் உள்ள ரங்கநாயகர் மண்டப வெளிப்புறம், கல்யாண உற்சவ மண்டபம் வழியாக வெள்ளி வாயில், தங்க வாயிலை அடைந்து தரிசனத்துக்குச் செல்வது.
இதில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் மகா துவாரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்தாலும், இந்த இரு தரிசன வரிசை காரணமாக தரிசன நேரம் மாறுபடுகிறது.

இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் கோயிலுக்குள் படிகாவலி அருகில் உள்ள துலாபார மண்டபத்தின் பக்கமிருந்து திருமலை ராயர் மண்டபம், கல்யாண உற்சவ மண்டபம் வெளிப்புற தரிசன வரிசை வழியாக வெள்ளி வாயிலை அடைய புதிய தரிசன வரிசையை ஏற்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் படிகாவலியிலிருந்து கொடிமரம், வெள்ளி வாயில் வழியாக தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கும், புதிய தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கும் 2 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே தரிசன நேரம் மாறுபடும். இந்த புதிய தரிசன வரிசை கடந்த சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை?

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 12th June 2017 05:08 PM  | 
daughter2

'நூலைப் போல சேலை... தாயைப் போல பிள்ளை', என்பது தமிழின் மிகப் பிரசித்தி பெற்ற பழமொழி. இதில் தாயை மட்டும் சேர்ப்பானேன். தகப்பனுக்குப் பங்கில்லையா என்ன? அப்படியல்ல பல சந்தர்பங்களில் தாய், தந்தை வேறுபாடுகளின்றி இருவருக்குமே இந்தப் பழமொழி பொருந்தித் தான் போகிறது. குறிப்பாக ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமண பேச்சு வார்த்தைகள் நிகழும் சமயத்தில் தான் இந்தப் பழமொழியை நாம் அதிகம் கேட்டிருக்கக் கூடும். எதற்காக அப்படிச் சொல்ல வேண்டும் என்றால்; திருமண பந்தத்தின் அடி வேரான தாம்பத்தியமும், அதன் மூலம் உருவாகும் வாரிசுகளும் மட்டுமே இந்தப் பழமொழியை நிர்ணயிக்கின்றன என்பதாலே தான். பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோ அவரவர் அப்பாக்களே! அதே போல ஆண்களுக்கு... எதிர்கால மனைவி எனும் விசயத்தில் அவர்களது ஆதர்ஷம் என்றென்றும் அவரவர் அம்மாக்கள் தான்.
இன்றைக்கும், என் அம்மாவைப் போல நீ ருசியாகச் சமைக்கவில்லை, என் அம்மாவைப் போல நீ வீட்டை நறுவிசாக நிர்வகிக்கவில்லை, என் அம்மாவைப் போல உனக்கு சாமர்த்தியமாக, புத்திசாலித்தனமாகப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று கூறி மனைவியை இம்சிக்கும் கணவர்கள் நிறைய உண்டு. அதே போல; என் அப்பாவைப் போல நீங்கள் பொறுப்பாக இல்லையென்றோ, என் அப்பாவைப் போல நீங்கள் பாசமாக இல்லையென்றோ கணவனைக் குறை கூறும் பெண்களும் கூட நிறைய உண்டு. இதை எதற்காகச் சொல்ல வேண்டுமெனில், இப்படித்தான் தொன்று தொட்டு மனித வாழ்க்கை முறை இருந்து வருகிறது. நாம் நமக்கான வாழ்க்கையின் நியதிகளை நமது பெற்றோர்களிடமிருந்தே கற்றுக் கொள்ள முயல்கிறோம். அப்படி இருக்கும் போது பெற்றொரிடமிருந்து நல்ல தனங்கள் மட்டுமல்ல கெட்ட தனங்களும் கூட எந்தத் தடையுமின்றி நம்மை வந்து அடைவது எளிதாகி விடுகிறது. அதிலும் நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆண்களை விட பெண்களே இவற்றால் அதிகமும் பாதிக்கப் பட்டு வருகிறார்கள் என்பதும் கண்கூடான உண்மை. 
அவ்வகையில் இந்த தலைமுறை இளம்பெண்களின் இல்லற வாழ்வில் அவர்களது பெற்றோரது தாக்கம் பலவகையிலும் எதிரொலிக்கிறது என்று சமீபத்தில் அமெரிக்காவில் மனநல ஆய்வுப் பத்திரிகையொன்று ஆய்வுக்கட்டுரை சமர்பித்திருக்கிறது. அந்தக் கட்டுரை மூலமாகத் தான் நாம் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை முறைகளை சற்று நேரம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு சிந்தித்தாலே போதும் ஒவ்வொருவருமே இதை வெகு எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.
ஜோ.டி. குரூஸின் ‘கொற்கை’ நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளராக சித்தரிக்கப் பட்டிருக்கும். அந்தப் பெண்ணின் அவ்விதமான நடத்தைக்கு காரணம் இளம் பிராயத்தில் அவளது தாய், அவளது தந்தையால் மிக மோசமாக வல்லுறவுக்கு உள்ளாக்கப் படும் செயலே என்று நாவல் சொல்கிறது. தன் மனைவி மாதவிடாய் காலத்து ஒதுக்கத்தில் இருக்கிறாள், என்பதைக் கூட உணர மறுக்கும் பாலியல் வெறி பிடித்த கணவர்கள் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் சம்பவம் ஒரு சாட்சி. இது உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதப் பட்டதாகக் கூட இருக்கலாம். நடு இரவில் குழந்தைகள் தூங்குகிறார்கள் எனும் அசட்டையான நம்பிக்கையாலோ, அல்லது அலட்சியத்தாலோ தகப்பனான ஒரு ஆண் செய்யும் இப்படியான காரியங்கள் நிச்சயமாக மகள்களின் தாம்பத்ய வாழ்வை அல்லது முறையான பாலியல் ஆர்வத்தை திசை மாறச் செய்து விடுகின்றன என்கின்றன மனநலம் சார்ந்த மருத்துவ ஆய்வுகள். 
அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப் படும் பாலியல் நடவடிக்கைகள் திருத்தவோ, மாற்றவோ எவருமில்லாத சூழலில் அப்படியே குழந்தைகள் மனதில் நீடித்து நிலைத்து வளர்ந்து பெரியவர்களாகும் போது சிலருக்கு தாம்பத்யத்தைப் பற்றிய ஒவ்வாமையை அல்லது விருப்பமின்மையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கொரு உதாரணம் மானஸாவின் கதை.

வீட்டு மனை பத்திரப் பதிவுக்கு புதிய அரசாணை! முழு விபரம்

Published on : 12th June 2017 01:03 PM  |   
land-registration
பதிவு துறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நில மதிப்பு குறைந்த நிலையில்கூட நிலங்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பு ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையிலேயே நீடிக்கிறது. எனவே, அதன் அடிப்படையிலேயே பத்திர பதிவு கட்டணமும் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கிறது.
இந்த கட்டணத்தில் பத்திர பதிவு செய்ய மக்கள் தயங்கியதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. எனவே, வழிகாட்டி மதிப்பீட்டுத் தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும் என சொல்லப்படுகிறது.
08.06.2017 நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு எண். 360 நாள் 08.06.2017 செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பத்திர பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இதை கருத்தில்கொண்டு, பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல் 33 சதவீதம் அளவு குறைத்து ஆணையிட்டுள்ளது.
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய விற்பனை (Conveyance), பரிமாற்றம் (Exchange), தானம் (Gift) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு (Settlement) போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு 9.6.2017 முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு ஆணை சொல்வதென்னெ?
9.6.2017 முதல் 33 சதவீதம் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியானது. தமிழகம் முழுவதிலுமுள்ள 50 பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து கிராம புல எண்கள் மற்றும் தெருக்கள்/நகர்களுக்கு பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் 9.06.2017 தேதி முதல் கிரையம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கான ஏற்பாடு ஆகிய நான்கு வகையான தன்மையுடைய ஆவணங்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 1%-இல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை ஒருங்கே நடைமுறைப்படுத்த (Simultaneous Implementation) வேண்டிய நடைமுறைகள்:
1.சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி (Market value Guidelines) ஆனது தற்போது 08.06.2017 தேதியில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியிலிருந்து 33 சதவீதம் குறைக்கப்பட்டு 09.06.2017 தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சீரமைக்கப்பட்ட சதுர மீட்டர் மதிப்பானது 08.06-2017 தேதியில் இணையதளத்தில் உள்ள மதிப்பில் 67% சதவீதம் சதுரமீட்டர் மதிப்பு பொறுத்து Rounded to Next 5 Rupees ஹெக்டேர் மதிப்பு பொறுத்து Rounded to Next 500 Rupees கடைபிடிக்கப்பட வேண்டும்.
2. பதிவு அலுவலர்கள் 09.06.2017 தேதி முதல் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் பொறுத்து சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியினை கடைபிடித்து பதிவுகள் மேற்கொண்டு மதிப்பு குறைவு இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதிவு ஆணை எண்.19136/ப/நாள் 22.04.1998ன் படி ஆவணப்பதிவுகளின் மூலமான உயர்மதிப்புகளை அடுத்துவரும் ஆவணங்களுக்கு கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.
3.ஆவண தாக்கல் நாளில் உள்ள வழிகாட்டி மதிப்பிற்கு குறைவான மதிப்பில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு ஆவணத் தாக்கல் நாளில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியின் படியே இந்திய முத்திரைத்தாள் சட்டப் பிரிவு 47 A1/A3 நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும் 09.06.2017 தேதி, மற்றும் அதற்கு பின்னர் பதிவு செய்யப்படும் ஆவணங்களைப் பொறுத்து 09.06.2017 தேதிக்கு முந்தைய பதிவு புள்ளி விவரங்களை கருத்தில் கொண்டு சார்பதிவாளர்கள் பரிந்துரை செய்வதோ மாவட்ட வருவாய் அலுவலர்/ தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் முன் ஆவணப்பதிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பு நிர்ணயம் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
4. 04.06.2017 தேதி மற்றும் அதற்குப் பின்னர் பதிவுக்குத் தாக்கல் செய்யப்படும் ஆவணத்தில் கண்ட ஓர் சொத்து பொறுத்து 09.06.2017 தேதிக்கு முன்னர் அதே சொத்து பதிவு செய்யப்பட்ட முன் ஆவணத்தில் கண்ட உயர்மதிப்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்/ தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் நிர்ணயித்த உயர்மதிப்பின் அடிப்படையில் மதிப்பு குறைவு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளலாகாது.
5. கட்டிடம் பொறுத்தும் முன் ஆவணப்பதிவில் கண்ட கட்டிட மதிப்பினை கடைபிடிக்க வேண்டும் என பதிவு அலுவலர்கள் ஆவணதாரர்களை நிர்பந்தித்தல் கூடாது. நடைமுறையில் உள்ள பொதுப்பணித்துறை தளவிலைப்பட்டியலில் படியான மதிப்பினை  அனுசரித்தாலே போதுமானது.
6. 08.06.2017 தேதி மற்றும் அதற்கு  முன்னர் பதிவு செய்யப்பட்ட/பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயத்திற்காக நிலுவையிலுள்ள வழக்குகள் பொறுத்தமட்டில் பழைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே மதிப்பு நிர்ணயம் செய்து அதனடிப்படையில் செயல்பட வேண்டும். அவ்வாறான மனை/மனை பிரிவுகளுக்கு 09.06.2017 தேதி முதல் மதிப்பு 33 சதவீதம் குறைத்து மேலே வரிசை 1-இல் குறிப்பிட்ட நடைமுறைப்படி கடைபிடித்திட வேண்டும்.
7. 09.06.2017 தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் பொறுத்த மதிப்பு நிர்ணய வழக்குகளுக்கு 09.06.2017 தேதிக்கு முன்னர் உள்ள சம்பந்தப்பட்ட சர்வே எண் மதிப்பினையோ, சுற்றி உள்ள மதிப்பினையோ பதிவு புள்ளி விவரப்படியான உயர்மதிப்பினையோ கருத்தில் கொள்ளுதல் கூடாது. ஆனால், 09.06.2017 தேதிக்குப் பிறகு ஏற்படும் உயர்மதிப்புகளை கருத்தில் கொண்டு  பதிவு சுற்றறிக்கை எண். 01/2014 நாள் 27.01.2014 (கோப்பு எண் 3321/ப/2014 மற்றும் தொடர்புடைடைய பதிவு ஆணைகளைப் பின்பற்றி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 
8. சீரமைக்கப்பட்ட மதிப்பானது இணையதளத்தில் 08.06.2017 தேதியில் கண்டுள்ள மதிப்பிற்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே முரண்பாடு களையப்பட்டு அல்லது மதிப்பு நிர்ணம் செய்யப்பட்டு அம்மதிப்பு இணையத்தளத்தில் உட்புகுத்த விடுபட்டிருக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து சார்பதிவாளர்கள் மாவட்ட பதிவாளர் வழி துணை பதிவுத் துறை தலைவர் ஆணையை பெற்று சீரமைக்கப்பட்ட மதிப்பு விவரத்தினை பதித்துறைத்தலைவடுக்கு தெரிவிக்கும் நிலைலையில் இணையதளத்தில் உரிய மதிப்பு மாற்றம் செய்யப்படும்.
9. முன் ஆவணங்களில் கண்ட மதிப்புகளை கருத்தில் கொள்ளக் கூடாது எனினும் ஓர் சொத்து பொறூத்து உடன்படிக்கை அமுலில் இருந்தால் அம்மதிப்பு சீரமைக்கப்பட்டுள்ள மதிப்பை விட கூடுதலாக இருக்கும்பட்சத்தில் உடன்படிக்கை ஆவணத்தில் கண்ட மதிப்பையே சந்தை மதிப்பாகக் கருத்தில் கொண்டு பதிவு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஆனால், சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னரோ பின்னரோ உடன்படிக்கை ஆவணம் ரத்து செய்யப்பட்டிருப்பின், ரத்து செய்யப்பட்ட உடன்படிக்கை ஆவணத்தில் கண்ட மதிப்பினை அதே ஆவணதாரர்களாக இருப்பின், கடைபிடித்திட நிர்பதித்தல் கூடாது.
 10. சந்தை மதிப்பு வழிகாட்டி 33 சதவீதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரையம்(Conveyance), பரிவர்த்தனை(Exchange) தானம் (Gift), மற்றும் குடும்ப நபர் அல்லாதவர்களுக்கிடையேயான ஏற்பாடு( Settlement in Favour of Non Family Members) [Articles 23, 31, 33 and 58 (a)(ii) of Schedule I of the Indian Stamp Act, 1899] ஆவணங்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக பார்வை 2-இல்  கண்ட அரசாணையின்படி உயர்த்தப்பட்டுள்ளதை பதிவு அலுவலர்கள் கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
11. மேலும் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியானது 9.6.2017 முதல் (பத்தி 9க்குட்பட்டு) பதிவுக்கு தாக்கல் ஆகும் அனைத்து வகையான ஆவணங்களுக்கும் பொருந்தும், 1%-இல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணமானது பத்தி 11-இல் கூறப்பட்டுள்ள நான்கு வகையான தன்மையுடைய ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். 
12. மேற்சொன்ன நடைமுறைக்குட்பட்டு மாவட்டப் பதிவாளர்கள் தங்களது தணிக்கை பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
13. இச்சுற்றறிக்கையின் 1 முதல் 12 வரையிலான நெறிமுறைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்களது எல்லைகுட்பட்ட சார்பதிவகங்கள், மாவட்டப்பதிவாளர் அலுவலகம், துணைபதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகங்களில் பதாதைகள் (Flex Board) மூலம் நன்கு விளம்பரப்படுத்தப்படுவதை மாவட்டப்பதிவாளர்கள்/துணைப்பதிவுத் துறைத்தலைவர்கள் ஆகியோர் உறுதி செய்திடல் வேண்டும்.
14. பதிவு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வரும் 09.36.2017 தேதி முதல் 13.06.2017 வரையிலான ஆவணப் பதிவுகளுக்கு சார்பதிவாளர்கள் முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணங்கள் உச்சவரம்பின்றி ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைப்பதன் மூலம் ரூ.900 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
C.P.சரவணன், வழக்கறிஞர்
செல்பேசி எண் - 9840052475

சென்னையில் 102 டிகிரி வெயில்

By DIN  |   Published on : 13th June 2017 04:51 AM  |   
தமிழகத்தில் 5 இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 12) 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது.

தமிழகத்திலேயே சென்னையில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவானது. மதுரை, கடலூர், திருச்சியில் 101 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரியிலும் 100 டிகிரி வெயில் பதிவானது.

மழை: வால்பாறையில் 14.4 மி.மீ மழையும் உதகையில் 1.6 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
சென்னை 102
திருச்சி, மதுரை,
கடலூர் 101
திருத்தணி 100
புதுச்சேரி 100

வேண்டாமே மோதல்!

By ஆசிரியர்  |   Published on : 12th June 2017 02:05 AM  |   
அதிகார மையங்களில் மோதல் ஏற்படுவது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடுவதால், மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமல்ல, அன்றாட அலுவல்கள்கூட முடங்கிவிடும். நோக்கம் நல்லதாகவே இருந்தாலும், அதை எட்டுவதற்குக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் அனைவரையும் அரவணைத்துப் போவதாக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத மனக்கசப்பையும் மோதலையும் உருவாக்குமானால், நோக்கம் பழுதுபடும்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், தில்லியைப் போலவே துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. அதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் தனது கட்டளைக்குக் கீழ்
படிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் நியாயமே இல்லை. கிரண் பேடி புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலே, ஆட்சி அதிகாரம் முழுவதையும் தானே வழிநடத்துவது என்கிற நோக்கத்தில் செயல்படத் தொடங்கியது வேதனைக்குரியது.
புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாக நடைமுறைச் சட்ட விதி 21(5)இன் கீழ், எந்தத் துறையைச் சேர்ந்த, எந்தக் கோப்பாக இருந்தாலும் அதைக் கேட்டுப் பெறும் உரிமை துணைநிலை ஆளுநருக்கு உண்டு. அந்தத் துறை சார்ந்த செயலாளர், துணைநிலை ஆளு
நரால் கோரப்பட்ட கோப்பை அனுப்பித் தரவேண்டும் என்பதும், அப்படி அனுப்பியிருப்பதைத் தொடர்புடைய அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதும்தான் விதி.
சில முக்கிய பிரச்னைகளில் துணைநிலை ஆளுநர் இதுபோன்று கோப்புகளைக் கோருவதும், அதை அமைச்சரின் ஒப்புதலுடன் செயலாளர்கள் அனுப்பி வைப்பதும் புதிதொன்றுமல்ல. ஆனால், அன்றாட அலுவல் தொடர்பான கோப்புகளை எல்லாம் துணைநிலை ஆளுநர் கோரத் தொடங்கியபோதுதான் பிரச்னை எழுந்தது. கோப்புகளில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னால், அந்தக் கோப்புகளை துணைநிலை ஆளுநர் கோருவதை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொள்ள மறுத்ததில் வியப்பொன்றும் இல்லை.
கோப்புகளில் துறை சார்ந்த அதிகாரிகள், செயலர், தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட அமைச்சர், முதல்வர் என்று பல கட்டக் குறிப்புகள் பரிமாற்றம் நடைபெறும். இறுதி முடிவு எட்டப்பட்ட பிறகு அந்தக் கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பித் தருவதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்பதும், குறிப்புப் பரிமாற்றங்களுக்கு இடையில் கோப்புகளைத் துணைநிலை ஆளுநர் கோரும்போது, நிர்வாக இயந்திரம் ஸ்தம்பிக்கிறது என்றும் முதல்வர் நாராயணசாமி கூறுவதில் நியாயம் இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பதவி ஏற்றவுடன், கட்செவி அஞ்சல் குழு ஒன்றை ஏற்படுத்தினார். இதில், புதுச்சேரி அரசைச் சேர்ந்த எல்லா மூத்த அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டார். அதில் அமைச்சர்களையோ, சட்டப்பேரவை உறுப்பினர்களையோ சேர்த்துக் கொள்ளவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கட்செவி அஞ்சலில் உத்தரவு போடுவது, விளக்கம் கேட்பது என்று துணைநிலை ஆளுநர் செயல்படத் தொடங்கியபோது, நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் தெரியாத நிலைமை ஏற்பட்டது. கட்செவி அஞ்சல் குழு மூலம் நடக்கும் நிர்வாகச் செயல்பாடுகளுக்கு முதல்வர் தடைவிதித்ததைத் தொடர்ந்து, எல்லா அதிகாரிகளும் அந்தக் குழுவிலிருந்து விலகி விட்டனர். இது கிரண்பேடியின் ஆத்திரத்தை அதிகரித்தது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், துணைநிலை ஆளுநருக்கு நிர்வாக ரீதியிலான பல அதிகாரங்கள் உண்டு. அதைப் பயன்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்படும்போது, அதற்கு முட்டுக்கட்டை போட கிரண் பேடி முற்படுகிறார் என்பது முதல்வர் தரப்பு முன்வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு.
கட்செவி அஞ்சல் குழு ஒன்றை அமைத்துக் கொண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தனக்குத் தகவல் தரும்படி மக்களிடம் கேட்க முற்பட்டிருப்பது, கிரண் பேடியின் உச்சகட்ட வரம்பு மீறல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து, மத்திய அரசால் துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் கருத்துக் கேட்பது, அவர்களது செயல்பாடுகள் குறித்து விசாரிக்க முற்படுவது போன்ற செயல்பாடுகள் ஜனநாயக முரண் மட்டுமல்ல, அதிகார வரம்பு மீறலுமாகும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமுறுகிறார்கள்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வரையும், அமைச்சரவை சகாக்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் தனது ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த முற்பட்டிருந்தால் அது வரவேற்புக்குரிய ஒன்று. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தன்னைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்று தரம் தாழ்த்துவதற்கும் தனது பதவியைப் பயன்படுத்த கிரண் பேடி முற்பட்டிருப்பது தவறான அணுகுமுறை.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டும்கூட தன்னால் தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பதைத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிந்தித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழலரசு, நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது என்று துணைநிலை ஆளுநர் கருதினால் அதைக் கலைக்கப் பரிந்துரைக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதும், தானே நிர்வாகத்தை நடத்த முற்படுவதும் ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.

NEWS TODAY 23.12.2025