Wednesday, June 14, 2017

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு நாளை வெளியீடு

பதிவு செய்த நாள்13ஜூன்2017 23:17

'நீட்' தேர்வு முடிவை வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., நாளை வெளியிடுகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல் நடத்தப்பட்டது. தேர்வு நடத்தும் முறை, தேர்வின் வினாத்தாள் குறித்து, வழக்குகள் தொடரப்பட்டன. அதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, விடைத்தாள் நகல், நேற்று, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியானது. விடைத்தாள் நகலின் மீது, இன்று மாலை, 5:00 மணிக்குள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், தேர்வுக்கான விடைக்குறிப்பு, நாளை வெளியாகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025