ஒரு கிலோ தக்காளி தற்போது 60 ரூபாய்
June 29, 2017

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒடசல்பட்டி கூட்ரோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மண்டிகள் இயங்கிவருகின்றன. இந்த மண்டிகளில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனையாகிவந்தது.
இதனிடையே, தக்காளி வரத்து பெருமளவு குறைந்ததால் தற்போது ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிவருகிறது. வரும் காலங்களில் தக்காளி விலை மேலும் பலமடங்கு உயரக்கூடும் என தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment