Thursday, June 29, 2017

விமான இன்ஜினுக்குள் நாணயங்களை போட்ட மூதாட்டி

பதிவு செய்த நாள்29ஜூன்
2017
00:28


ஷாங்காய்: சீனாவில், மூட நம்பிக்கை காரணமாக, விமான இன்ஜினில் நாணயங்களை போட்டு, புறப்பாட்டை தாமதப்படுத்திய மூதாட்டியை, போலீசார் கைது செய்தனர்.

அண்டை நாடான, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில், பெண் பயணி ஒருவர், விமான இன்ஜினுக்குள் நாணயங்களை போட்டதால், பல மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.

இது குறித்து, விமான நிலைய போலீசார் கூறியதாவது: மகள் மற்றும் மருமகனுடன் வந்த, 80 வயது மூதாட்டி, விமான இன்ஜினுக்குள் நாணயங்களை வீசி எறிவதாக, எங்களுக்கு தகவல் கிடைத்தது. விமானத்தில் இருந்த, 150 பயணியரையும் கீழே இறக்கி, இன்ஜினை முழுமையாக சோதனையிட்டோம்.

இன்ஜினுக்கு அருகில் எட்டு நாணயங்களும், இன்ஜினுக்கு உள்ளே ஒரு நாணயமும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அகற்றப்பட்டன. உடனடியாக, அந்த மூதாட்டியை கைது செய்து விசாரித்த போது, விமான பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்து, நாணயங்களை போட்டதாக கூறினார். இதனால், அந்த விமானம், பல மணி நேர தாமதத்திற்கு பின் கிளம்பியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...