Thursday, June 29, 2017

சென்னை - பெங்களூரு இடையே 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கப் போகுது ரயில்.



சென்னை- பெங்களூரு மற்றும் மைசூரு இடையேயான 450 கிலோ மீட்டர் தூரத்துக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சேவை நடத்த ரயில்வே துறை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஜெர்மனி அரசு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் இந்த அதிவேக ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் ஜெர்மனி அரசுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஜெர்மனி அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள், பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜெர்மனி அதிகாரிகள் குழு விரைவில் விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது

இந்த குழுவினர் தங்கள் ஆய்வறிக்கையை ஓர் ஆண்டுக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்வார்கள்.

அவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், நிதி உதவி வழங்குவது குறித்து ஜெர்மனி அரசு இறுதி முடிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.

இந்த அதிவேக ரெயில் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025