Thursday, June 29, 2017

நாடு முழுவதும் வங்கிகள் ஸ்டிரைக் - வங்கி சங்கங்கள் முடிவு.!!!




ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது.

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிடவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளில், அவுட்சோர்சிங் அனுமதிக்க கூடாது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க எதிர்ப்பு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கவும், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Dailyhunt




No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025