Thursday, June 29, 2017

ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் தர திட்டம்
பதிவு செய்த நாள்28ஜூன்
2017
23:18




ரேஷனில் மக்கள் ஏமாறுவதை தடுக்க சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரிசி கார்டுதாரருக்கு அதிகபட்சமாக இரண்டு கிலோ; சர்க்கரை விருப்ப கார்டுதாரருக்கு மூன்று கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. ரேஷனில் சர்க்கரை விலை குறைவு என்பதால் அரிசி வாங்காதவர்களும் சர்க்கரை மட்டும் வாங்குகின்றனர்.ஆனால் கடை ஊழியர்கள் எடையில் முறைகேடு செய்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் மக்கள் ஏமாறுகின்றனர். எனவே சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில் எடை குறைப்பு முறைகேட்டை தடுக்க பாக்கெட்டில் வழங்குமாறு மக்களும், ஊழியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். அனைத்து பொருட்களையும் பாக்கெட்டில் வழங்க கூடுதல்
செலவாகும் என்பதால் பல முறை பரிசீலித்தும் பாக்கெட்டில் வழங்கும் முறை செயல்படுத்தவில்லை. பருப்பை பாக்கெட்டில் வழங்கினால், தரமற்றது என எளிதில் தெரிந்து விடும்.

ரேஷனில் வழங்க மாதம் தோறும், 36 ஆயிரத்து, 500 டன் சர்க்கரை தேவை. அதை இரண்டு, மூன்று கிலோ பாக்கெட்டில் வழங்குவது சுலபம். எனவே சர்க்கரையை மட்டும் பாக்கெட்டில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்ததும் இந்த முறை நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025