Sunday, April 16, 2017

ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்
பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:26

DINAMALAR

ஆர்.கே.நகரில், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள், சுற்றுலா சென்று வருகின்றனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட, சென்னை, ஆர்.கே.நகரில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்தது. இதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியில் தினகரன், பன்னீர் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது. மேலும், குத்து விளக்கு, புடவை உள்ளிட்ட பரிசு பொருட்களையும் வழங்கியது. தி.மு.க., தரப்பு, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கியது.இதனால், ஆர்.கே.நகரில் உள்ள ஒரு வாக்காளருக்கு, 6,000 ரூபாய் கிடைத்தது. 

பணம் பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் கமிஷன், திடீரென தேர்தலை ரத்து செய்தது.இதையடுத்து, கட்சிகள் வழங்கிய பணத்தில், வாக்காளர்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டி; திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.இது குறித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:எங்கள் குடும்பத்தில், எட்டு பேர் உள்ளனர். ஒரு ஓட்டுக்கு, 6,000 ரூபாய் என, மொத்தம், 48 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு, குடும்பத்துடன், சேலம், ஏற்காடுக்கு சுற்றுலா செல்கிறோம். எங்களை போல் பலரும், ஊட்டி, கொடைக்கானல் என, சுற்றுலா சென்று   ருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்வி கட்டணம்பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ளது. இதற்காக, மே, ஜூன் மாதங்களில், கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்.கே.நகரில், அரசியல் கட்சிகளிடம் இருந்து ஓட்டுக்கு வாங்கிய பணத்தை, தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணமாக, பலர் செலுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, 'கல்வி கட்டணம் செலுத்த உதவிய கட்சிகளுக்கு நன்றி; இப்படிக்கு, ஆர்.கே.நகர் மக்கள்' என, 'வாட்ஸ் ஆப்பில்' தகவல் பரவுகிறது.

- நமது நிருபர் -
போலி சான்றிதழ் மூலம் அரசு வேலை 25 ஆண்டு ஊழியருக்கு அபராதம்

பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:37

சென்னை, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில், அலுவலக உதவியாளராக சுப்ரமணியன் என்பவர், 1982ல் பணியில் சேர்ந்தார். கடைசியாக, 2007ல், அகரத்தில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றினார். 25 ஆண்டுகளாக பணியில் இருந்துள்ளார்.

இவரது பிறந்த தேதி, கல்வி தகுதி குறித்து, 2005 டிசம்பரில் புகார் வந்தது. போலி ஆவணங்களை சமர்பித்து, வேலையில் சேர்ந்ததாக, புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சுப்ரமணியனிடம் விளக்கம் பெறப்பட்டது.போலி ஆவணங்களை சமர்பித்திருப்பதாக, கல்வித்துறை முடிவு செய்து, 2007 ஆகஸ்ட்டில், சுப்ரமணியத்தை பணியில் இருந்து விடுவித்து, வேலுார் மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தாக்கல் செய்த, மாற்று சான்றிதழில் உள்ள முத்திரையில், 'தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா' என, குறிப்பிடப்பட்டுள்ளது. 1970ல், இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 என அழைக்கப்படும், மேல்நிலைப் பள்ளி முறை, 1978 - 79ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., என, இருந்தது. அப்படி இருக்கும் போது, 1970ல் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழில், மேல்நிலைப் பள்ளி என, குறிப்பிட்டு வழங்கியிருக்க முடியாது.மனுதாரர் சமர்ப்பித்த மாற்று சான்றிதழ், போலியானது தான். போலி சான்றிதழை சமர்ப்பித்து, வேலையில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். 

அவர் செய்த பாவத்துக்காக, கிரிமினல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், கல்வி துறை அதை மேற்கொள்ளவில்லை.இந்த கட்டத்தில், கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என, இந்த நீதிமன்றமும் கருதுகிறது. அவரை, பணியில் இருந்து விடுவித்த உத்தரவு சரியானதே. இந்த உத்தரவு பிறப்பித்த பின், விருப்ப ஓய்வு அளிக்கும்படி, மனுதாரர் கேட்டுள்ளார். அவ்வாறு கோருவதில் நியாயம் இல்லை.எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டவிரோத செயல் மூலம் வேலையில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக ஆதாயம் அடைந்தாலும், அதை வசூலிப்பதற்கு பதில், வழக்கு செலவு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் விதிக்கிறேன். அந்த தொகையை, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரயில்வே ஸ்டேஷன் 'டிவி'யில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்15ஏப்  2017   21:37

புதுடில்லி, டில்லியில், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்,'டிவி'யில், ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.தலைநகர் டில்லியில், ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் நடைபாதையில், 'டிவி' பொருத்தப்பட்டுள்ளது.

 இதில், ரயில்கள் வரும் நேரம் குறித்து, ஒளிபரப்பப்படும்; விளம்பரங்களும் ஒளிபரப்பாகும்.இந்த நிலையில், சமீபத்தில், காலை நேரத்தில், வழக்கம் போல், ரயில்வே ஸ்டேஷன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது, 'டிவி'யில் திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பானது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், அந்த வீடியோ ஒளிபரப்பை, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்தனர். அந்த ஒளிபரப்பு, ஒரு நிமிடத்தில் நின்று விட்டது.

மொபைலில் பதிவு செய்தவர்கள், அதை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து டில்லி மெட்ரோ ரயில் கழக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாச வீடியோ ஒளிபரப்பு பற்றி, எங்களிடம் யாரும் புகார் செய்வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் புழக்கத்துக்கு வருது 1 ரூபாய் நோட்டு

பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:31




பல்லடம், பல்லடத்தில் உள்ள வங்கி ஒன்று, பயன்பாட்டில் மிகவும் அரிதாகிவிட்ட, 1 ரூபாய் நோட்டு கட்டுகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு, 'இன்ப அதிர்ச்சி' தந்துள்ளது.ஒரு ரூபாய் நோட்டுகள் பயன்பாடு பெருமளவு குறைந்து, அதற்கு பதிலாக நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள, தனியார் வங்கி கிளை, தன் வாடிக்கையாளர்களுக்கு, 1 ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்துள்ளது

.ஏற்கனவே புழக்கத்திலிருந்த, இந்த ரூபாய் நோட்டுகள், மீண்டும் புதிதாக அச்சிடப்பட்டு,  ளிவந்துள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றேன். 'சலான்' பூர்த்தி செய்து, பணம் பெற கவுன்டரில் நின்றபோது, 1,000 மதிப்புள்ள, 1 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.தற்போது, 1 ரூபாய் நாணயம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், 1 ரூபாய் நோட்டு கிடைத்தது சந்தோஷம்; ஆனால், பலரும் குழம்பிப்போய், இதை வாங்க மறுத்தால் என்ன செய்வது என்ற கவலையும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வங்கி கிளை மேலாளரிடம் கேட்டதற்கு, 'பழைய, 1 ரூபாய் நோட்டு, திடீரென தற்போது வெளி வந்ததற்கான காரணம் தெரியவில்லை. வங்கி மேலிடத்தில் இருந்து எங்களுக்கு வந்ததை, வாடிக்கையாளர்களுக்கு தந்தோம். அவ்வளவு தான்' என்றார்.
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு

பதிவு செய்த நாள்16ஏப்  2017   04:30




'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன், பிழைகளை சரி செய்ய, ரேஷன் கார்டு தாரருக்கு, உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசு, மக்களிடம் இருந்து, 'ஆதார்' எண்ணை பெற்று, அவற்றில் உள்ள விபரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. அந்த கார்டில் பிழை இருப்பதாக, சிலர் புகார் எழுப்பினர். சுற்றறிக்கைஇதையடுத்து, ரேஷன் கார்டுதாரர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றில், பிழைகளை சரி செய்த பின், ஸ்மார்ட் கார்டு அச்சிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ரேஷன் கடைகளில், மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைக்குமாறு அறிவுறுத்தி, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* ஸ்மார்ட் கார்டு வினியோக பணியில், கம்ப்யூட்டர் தொகுப்பில் புகைப்படம் இடம் பெறாத கார்டுதாரரின் விபரம், இந்த ரேஷன் கடை ஊழியரிடம் உள்ளது.

அந்த பட்டியலில் உள்ள குடும்ப தலைவரின் புகைப்படத்தை, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற மொபைல் ஆப் அல்லது www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
* ரேஷன் கார்டுதாரரின் அனைத்து விபரங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழில், கம்ப்யூட்டர் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்து, உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த விபரங்களில், ஏதேனும் விடுபட்டு இருப்பின், மேற்கூறிய இணையதள வசதி மூலம் சரி செய்து கொள்ளலாம்

* அந்த விபரங்கள் சரி செய்யப்பட்ட பின்பே, ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்க இயலும். இது தொடர்பாக, ரேஷன் கார்டுதாரர், முழு ஒத்துழைப்பை வழங்கி, விரைவில் ஸ்மார்ட் கார்டு பெறும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் ஆப்

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிழை திருத்தம் செய்ய விரும்புவோர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டும். அதில், திருத்தம் செய்யும் பகுதிக்கு சென்று, ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அந்த எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அதை செலுத்தி, பிழைகளை சரி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். 

- நமது நிருபர் -


அமைச்சர்கள் மீது சாதாரண வழக்கு  வருமான வரித்துறை கடும் அதிருப்தி

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை பறித்து செல்ல முயன்ற அமைச்சர்கள் மீது, சாதாரண பிரிவில், போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பது, வருமான வரித்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.




சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ச.ம.க., தலைவர் சரத்குமார் வீடுகளில், 7ம் தேதி, வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். தகவலறிந்து,

அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், அங்கு விரைந்தனர்.

அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய படையினர் தடுத்தனர். எதிர்ப்பை மீறி,அமைச்சர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கு, சோதனையில் ஈடுபட்ட, வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு, ஆவணங்களை அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பை மீறி, அத்துமீறி உள்ளே நுழைந்தது; பணி செய்ய விடாமல் தடுத்தது; ஆவணங்களை அழிக்க முயன்றது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர், கரண் சின்ஹாவிடம், 12ம் தேதி புகார் அளித்தனர்.புகார் அடிப்படையில், அபிராம புரம்போலீசார், அமைச்சர்கள் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நான்கு பிரிவுகளிலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை இருந்தாலும், அபராதம் மட்டும்

செலுத்தி, விடுதலையாகவாய்ப்பு உள்ளது. மேலும், அவர்கள் எளிதாக முன்ஜாமின் பெற முடியும்.மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களே, சட்டத்தை மீறி, அதிகாரிகளுக்கு இடையூறு செய்த நிலையில், அவர்கள் மீது, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -
பெண்கள், முதியோருக்கு ரயில்வே சிறப்பு வசதி

பதிவு செய்த நாள்15ஏப்  2017   21:35

புதுடில்லி, ரயிலில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, முன்பதிவு டிக்கெட்டிற்கான படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது

.ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், பொதுவாக, கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என, குறிப்பிட்ட எண்ணிக்கையில், 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒதுக்கீடுஆனால், நான்கு மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகள் விருப்பப்படி, படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுகின்றன. இதனால், இதற்கு பின் முன்பதிவு செய்யும் பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்' கிடைப்பது இல்லை

.இப்பிரச்னையை தவிர்க்க, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தாலும், அவர்களுக்கான படுக்கை வசதியை, ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன் ஒதுக்கீடு செய்ய, ரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்படும். அதன்பின் உள்ள படுக்கைகள், சாதாரண பயணிகளுக்கு ஒதுக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், படுக்கை வசதி குறித்த குறுஞ்செய்தி, பயணிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.ஜூன் இறுதிக்குள்முதற்கட்டமாக, இம்மாத இறுதியில், ராஜ்தானி போன்ற ரயில்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

 மே மாதத்தில், 200க்கும் மேற்பட்ட ரயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து ரயில்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...