மீண்டும் புழக்கத்துக்கு வருது 1 ரூபாய் நோட்டு
பதிவு செய்த நாள்15ஏப் 2017 22:31

பல்லடம், பல்லடத்தில் உள்ள வங்கி ஒன்று, பயன்பாட்டில் மிகவும் அரிதாகிவிட்ட, 1 ரூபாய் நோட்டு கட்டுகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு, 'இன்ப அதிர்ச்சி' தந்துள்ளது.ஒரு ரூபாய் நோட்டுகள் பயன்பாடு பெருமளவு குறைந்து, அதற்கு பதிலாக நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள, தனியார் வங்கி கிளை, தன் வாடிக்கையாளர்களுக்கு, 1 ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்துள்ளது

.ஏற்கனவே புழக்கத்திலிருந்த, இந்த ரூபாய் நோட்டுகள், மீண்டும் புதிதாக அச்சிடப்பட்டு, ளிவந்துள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றேன். 'சலான்' பூர்த்தி செய்து, பணம் பெற கவுன்டரில் நின்றபோது, 1,000 மதிப்புள்ள, 1 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.தற்போது, 1 ரூபாய் நாணயம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், 1 ரூபாய் நோட்டு கிடைத்தது சந்தோஷம்; ஆனால், பலரும் குழம்பிப்போய், இதை வாங்க மறுத்தால் என்ன செய்வது என்ற கவலையும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வங்கி கிளை மேலாளரிடம் கேட்டதற்கு, 'பழைய, 1 ரூபாய் நோட்டு, திடீரென தற்போது வெளி வந்ததற்கான காரணம் தெரியவில்லை. வங்கி மேலிடத்தில் இருந்து எங்களுக்கு வந்ததை, வாடிக்கையாளர்களுக்கு தந்தோம். அவ்வளவு தான்' என்றார்.
No comments:
Post a Comment