Sunday, April 16, 2017

ரயில்வே ஸ்டேஷன் 'டிவி'யில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்15ஏப்  2017   21:37

புதுடில்லி, டில்லியில், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்,'டிவி'யில், ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.தலைநகர் டில்லியில், ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் நடைபாதையில், 'டிவி' பொருத்தப்பட்டுள்ளது.

 இதில், ரயில்கள் வரும் நேரம் குறித்து, ஒளிபரப்பப்படும்; விளம்பரங்களும் ஒளிபரப்பாகும்.இந்த நிலையில், சமீபத்தில், காலை நேரத்தில், வழக்கம் போல், ரயில்வே ஸ்டேஷன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது, 'டிவி'யில் திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பானது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், அந்த வீடியோ ஒளிபரப்பை, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்தனர். அந்த ஒளிபரப்பு, ஒரு நிமிடத்தில் நின்று விட்டது.

மொபைலில் பதிவு செய்தவர்கள், அதை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து டில்லி மெட்ரோ ரயில் கழக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாச வீடியோ ஒளிபரப்பு பற்றி, எங்களிடம் யாரும் புகார் செய்வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...