Sunday, April 16, 2017

ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்
பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:26

DINAMALAR

ஆர்.கே.நகரில், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள், சுற்றுலா சென்று வருகின்றனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட, சென்னை, ஆர்.கே.நகரில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்தது. இதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியில் தினகரன், பன்னீர் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது. மேலும், குத்து விளக்கு, புடவை உள்ளிட்ட பரிசு பொருட்களையும் வழங்கியது. தி.மு.க., தரப்பு, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கியது.இதனால், ஆர்.கே.நகரில் உள்ள ஒரு வாக்காளருக்கு, 6,000 ரூபாய் கிடைத்தது. 

பணம் பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் கமிஷன், திடீரென தேர்தலை ரத்து செய்தது.இதையடுத்து, கட்சிகள் வழங்கிய பணத்தில், வாக்காளர்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டி; திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.இது குறித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:எங்கள் குடும்பத்தில், எட்டு பேர் உள்ளனர். ஒரு ஓட்டுக்கு, 6,000 ரூபாய் என, மொத்தம், 48 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு, குடும்பத்துடன், சேலம், ஏற்காடுக்கு சுற்றுலா செல்கிறோம். எங்களை போல் பலரும், ஊட்டி, கொடைக்கானல் என, சுற்றுலா சென்று   ருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்வி கட்டணம்பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ளது. இதற்காக, மே, ஜூன் மாதங்களில், கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்.கே.நகரில், அரசியல் கட்சிகளிடம் இருந்து ஓட்டுக்கு வாங்கிய பணத்தை, தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணமாக, பலர் செலுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, 'கல்வி கட்டணம் செலுத்த உதவிய கட்சிகளுக்கு நன்றி; இப்படிக்கு, ஆர்.கே.நகர் மக்கள்' என, 'வாட்ஸ் ஆப்பில்' தகவல் பரவுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...