Sunday, April 16, 2017

கேபிள் 'டிவி' விரோதத்தில் ஆசிரியை கொலை கொலையாளியின் தந்தையை அடித்து கொன்ற மக்கள்
பதிவு செய்த நாள்15ஏப்    2017 23:15




தலைவாசல், கேபிள், 'டிவி' உரிமையை பெறுவதில் ஏற்பட்ட முன் விரோதத்தால், தனியார் பள்ளி ஆசிரியை, பிரவுசிங் சென்டர் உரிமையாளரால் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த கொலையாளியின் தந்தை பொதுமக்கள் தாக்கியதில், பலியானார்.சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த, ஆறகளூரை சேர்ந்த, மாரியாப்பிள்ளை மனைவி சத்யா, 30. இவர், தனியார் பள்ளி ஆசிரியை. சத்யாவின் தாய் சாந்தி, 62, ஆறகளூரில் அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் ஆப்பரேட்டராக இருந்து வருகிறார். இந்த தொழிலை, அவருடைய மருமகன் மாரியாப்பிள்ளை கவனித்து வந்தார். அதே பகுதியில், பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் விஜய், 33, கேபிள், 'டிவி' உரிமையை பெற முயற்சித்து வந்துள்ளார்

.இதனால், இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், 30 ரூபாய்க்கு கேபிள் இணைப்பு தருவதாக கூறி, விஜய் தரப்பினர், ஊர் முழுவதும் ஒயர்களை அமைத்து வந்தனர். இதற்கு, 'அவர்கள், 30 ரூபாய்க்கு இணைப்பு கொடுத்தால், நாங்கள் இலவசமாக தருவோம்' எனக்கூறி, சாந்தி தரப்பினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.இதனால் ஆத்திரமடைந்த விஜய் தரப்பினர், இரண்டு நாட்களுக்கு முன், மாரியாப்பிள்ளை, சபரிமலைக்கு சென்றதை பயன்படுத்தி, சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.நேற்று காலை, 8:00 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த சத்யாவை, கழுத்தை அறுத்து விஜய் கொலை செய்தார். சத்யாவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், அவர் கொலையுண்டு கிடப்பதை பார்த்து, அங்கிருந்த விஜயை தாக்க முயன்றனர். ஆனால், அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.சம்பவ இடத்துக்கு விஜயின் தந்தை ராஜேந்திரன், 60, வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, விஜய், 'இங்கு ஏன் வந்தாய்?' என கேட்டு, அருகில் இருந்த மர நாற்காலியை எடுத்து, தந்தையின் தலையில் பலமாக அடித்தார்.

இதற்கிடையே, விஜயிடமிருந்த கத்தி நழுவியதை பார்த்த மக்கள், இருவரையும் பிடித்து தனி அறையில் அடைத்து, 'தர்ம அடி' கொடுத்தனர். தகவலறிந்த தலைவாசல் போலீசார், அடைத்து வைக்கப்பட்ட விஜய், ராஜேந்திரனை பிடிக்க உள்ளே செல்ல முயற்சித்த போது, பொதுமக்கள் போலீசாரை தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி, சத்யாவின் உடலை மீட்டனர். தன் மகன் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில், ராஜேந்திரன் இறந்து கிடந்தார். விஜய் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். ராஜேந்திரன் உடலை கைப்பற்றிய போலீசார், விஜயை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டை சூறையாடிய மக்கள்: ஆசிரியையை கொன்ற விஜயின் பிரவுசிங் சென்டரை, நேற்று காலை, 10:00 மணிக்கு, மக்கள் அடித்து நொறுக்கினர். இருந்தும், ஆத்திரம் அடங்காத மக்கள், விஜயின் வீட்டிற்கு சென்று, கதவை உடைத்ததுடன், வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். மரக் கட்டில், கதவுகள், 'டிவி' போன்றவற்றை சாலையில் போட்டு, தீ வைத்து எரித்தனர்.இதனால், அப்பகுதியில் இருந்த குடிசை வீடுகளுக்கு தீ பரவ இருந்த நிலையில், மக்களே, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...