பெண்கள், முதியோருக்கு ரயில்வே சிறப்பு வசதி
பதிவு செய்த நாள்15ஏப் 2017 21:35
புதுடில்லி, ரயிலில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, முன்பதிவு டிக்கெட்டிற்கான படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது
பதிவு செய்த நாள்15ஏப் 2017 21:35
புதுடில்லி, ரயிலில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, முன்பதிவு டிக்கெட்டிற்கான படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது
.ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், பொதுவாக, கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என, குறிப்பிட்ட எண்ணிக்கையில், 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒதுக்கீடுஆனால், நான்கு மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகள் விருப்பப்படி, படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுகின்றன. இதனால், இதற்கு பின் முன்பதிவு செய்யும் பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்' கிடைப்பது இல்லை
.இப்பிரச்னையை தவிர்க்க, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தாலும், அவர்களுக்கான படுக்கை வசதியை, ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன் ஒதுக்கீடு செய்ய, ரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்படும். அதன்பின் உள்ள படுக்கைகள், சாதாரண பயணிகளுக்கு ஒதுக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், படுக்கை வசதி குறித்த குறுஞ்செய்தி, பயணிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.ஜூன் இறுதிக்குள்முதற்கட்டமாக, இம்மாத இறுதியில், ராஜ்தானி போன்ற ரயில்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
மே மாதத்தில், 200க்கும் மேற்பட்ட ரயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து ரயில்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment